அஷ்றப் அலி - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  அஷ்றப் அலி
இடம்:  சம்மாந்துறை , இலங்கை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Oct-2015
பார்த்தவர்கள்:  4868
புள்ளி:  1113

என்னைப் பற்றி...

சிறு வயது முதல் கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவன். இடையில் சிறிது தேக்கம். மீண்டும் முனைப்போடு எழுதுகின்றேன் இலங்கையில் பிறந்தவன் தற்போது கட்டார் நாட்டில் ஓர் அலுவலகத்தில் மொழி பெயர்ப்பாளராக பணி புரிகின்றேன்.

என் படைப்புகள்
அஷ்றப் அலி செய்திகள்
அஷ்றப் அலி - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Apr-2023 7:02 pm

அழகே அமுதே
கனியே கனிவே
சுவையே சுகமே
மனதை வருடும்
மகிழ்வுக் காற்றே
அருகில் சென்று
அணைக்கத் தோன்றும்
நறுமணப் பூவே
அறுசுவை அழகே
அள்ளி எடுத்து
பள்ளி முடித்து
இன்றும் இனியும்
என்றும் கனியும்
அன்பை ரசிப்போமா?
பிட்டும் தேங்காயும்
பட்டும் நூலும் போல்
வாழ்வை நன்றாய்
வகைபட ருசிப்போமா?

மேலும்

அஷ்றப் அலி - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Apr-2022 2:48 pm

என்ன கண்டாய் என்னில் குறை
ஏன் தள்ளி வைத்தாய் எனைசிறை
மாமன் மகனல்லவா நான் முறை
அழியாதடீ என்றும் இக் கறை
கழியாதடீ நேரம் பழியாதடீ பாபம்
அடிக்க வேண்டூம் நீ காதல் பறை

மேலும்

அஷ்றப் அலி - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Dec-2021 2:53 am

விழியை நோக்கி காதல் சொல்ல. வந்தேன்
எனை நோக்கி காதலா என்றது

மேலும்

அஷ்றப் அலி - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Nov-2020 12:16 pm

வளர் புன்னகையால் வசியம் செய்தெந்தன்
உலர் நெஞ்சினை ஓடையாய் மாற்றினாய் பழவாய் பூவிதளே பசுங்கிளியே முறைமாமன் களவாய் நெஞ்சிலே கலந்தாயடி காமதேவி எழுவாய் என்னவளே கரம்கோர்ப்போம் நாம் அஷ்றப் அலி

மேலும்

உன்னைக் கண்டேன் உன்னழகைக் கண்டேன்
என்னை உன்னிடம் தந்தேன் என்னுலகே
உந்தன் மையலில்

மேலும்

தட்டச்சு பிழை திருத்திவிட்டேன் கருத்துக்கு நன்றி நண்பரே அஷ்ரப் அலி 01-Sep-2020 5:11 pm
'மையல்' திரிபடைந்து 'மெய்யல்' ஆகிவிட்டதா ? அல்லது இரண்டும் ஒரே பொருள் தருமா ?வாசவன் ...கவிதை அருமை 01-Sep-2020 2:44 pm
அஷ்றப் அலி - கவிதாயினி அமுதா பொற்கொடி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Sep-2020 10:26 am

அடி தொழுகின்றேன்
ஆருயிர் எந்தன் இறைவா!

இடியென வரும் துன்பங்கள்
ஈனமாய் சீண்டும் இழிகள்
உண்டென்று நீ கண்டால்
ஊழியாய் உடனதனைப் போக்கு ...

எதிரிகள் நெஞ்சில் இல்லை
ஏகமாய் வஞ்சம் இல்லை
ஐசுவரியம் வேண்டவில்லை
ஐவளமும் நாடவில்லை....

ஒளிபடை ஓங்காரனே
ஓதியுனை சரணடைந்தேன்
ஔடதமாய் பிணியை நீக்கி
ஆட்கொண்டு என்னுள் உறைவாய்!

கவிதாயினி அமுதா பொற்கொடி

மேலும்

கருத்தான பிரார்த்தனை கவிதை . இறைவன் பாதமட்டில் அல்ல அனைவரின் நெஞ்சையும் தொடுகிறது. வாழ்த்துக்கள். 02-Sep-2020 8:01 pm
அழகான வேண்டுதல் கவிதை, அருமை ..ஐவளம் என்றால் என்ன? சிறிது விளக்கம் தாருங்கள் கவிதாயினி ! 01-Sep-2020 11:41 am
arumai 01-Sep-2020 10:49 am
அஷ்றப் அலி - அஷ்றப் அலி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Aug-2020 1:03 pm

செம்மஞ்சள் ரதமே பெண் மலர்வனமே
சிறு கொடியில் காய்த்த வட்டச்
சுரைக்காயே என் அத்தை மகளே
நுரை தள்ளும் கடலலை போல்
சிரை முதல் பாதம் வரை உன்னில்
அழகு மிளிருதடி என் ஆசை பெருகுதடி

அஷ்றப் அலி

மேலும்

மிகவும் அழகான கருத்து ...கவிதையின் அழகை ரசித்து ஆதங்கத்தை வரிகளில் கொட்டியிருக்கிறீர்க்ள் ...மிக்க நன்றி அன்பின் பன்னீர் செல்வம் 01-Sep-2020 11:37 am
..ம்ம் ' என் அத்தை மகள் ' என்கிற தலைப்பு .... தந்துவிட்டதே ' உரிமைக் குரல் ' உமக்கு ... கவிதையின் தொனி அதை உறுதி செய்கிறது .. ' நுரை தள்ளும் கடலலை போல்'... என்ற வரிகளில் தடையில்லா அன்பைத் தெரிவிக்கிறது . உவமையை மிகவும் ரசித்தேன் . வாழ்த்துக்கள் கவி அஷ்றப் அலி அவர்களே . 31-Aug-2020 4:28 pm
அஷ்றப் அலி - அஷ்றப் அலி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Aug-2020 11:39 am

பூவிட்டு பொட்டிட்டு வாசலில் கோலமிட்டு
ஓண சாதனங்கள் சோதித்து மேடிச்சி
ஆட்காரூ ஒன்னாகி ஆஷம்ஷகள் பறஞ்சு
கூட்டுக் கூடி கூட்டாஞ் சோறு உண்டாக்கி
சாதிஇன்றி பேதமின்றி சகலரும் ஓர் முகமாய்
ஒண்ணாயிருந்து ஒரே பந்தியில் கத பறஞ்சு
ஆக்கிய சத்யாவை ஆறவைத்து பகிர்ந்துண்டு
சந்தோசம் பொங்க சகலரும் ஆகர்ஷிக்கும்
கேரள பண்டிகையே வாழ்த்துக்கள் பல கோடி


அஷ்றப் அலி

மேலும்

மிக்க நன்றி அன்பின் பன்னீர் ..உங்களுக்கும் ஓணப் பண்டிகை நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் 31-Aug-2020 8:31 pm
ஆஷம்ஷகள் என்றால் மழையாள மொழியில் வாழ்த்துக்கள் என்று பொருள் படும் .ஓண சத்யா என்றால் இத்தினத்தில் தயார் செய்யப்படும் பல்வகைப்பட்ட உணவுப் பதார்த்த்ங்களைப் பெயர் குறிக்கும் .. மிக்க நன்றி அன்பின் கவின் .. 31-Aug-2020 8:29 pm
ஆஷம்ஷகள் என்றால் ? 31-Aug-2020 6:44 pm
ஓணம் வாழ்த்த்துக்கள் அழகிய ஓணம் கவிதை "ஒண்ணாயிருந்து ஒரே பந்தியில் கத பறஞ்சு ஆக்கிய சத்யாவை ஆறவைத்து பகிர்ந்துண்டு" சத்யாவை ஆறவைத்து என்றால் ? 31-Aug-2020 6:41 pm

பட்டி பலுகப் பலுக
பால் பானைப் பொங்கப் பொங்க
தீமைகள் முறிந்தோட
நன்மைகள் நின்று துலங்க
பொங்கலோ பொங்கல்!

உழவும் தொழிலும் பெருகிட
நிலமும் நீரும் திளைத்திட
வயலும் வாழ்வும் செழித்திட
வறுமையும் வெறுமையும் நீங்கிட
பொங்கலோ பொங்கல்!

தீந்தமிழ் திசைதோறும் நிரவிட
பைந்தமிழ் பாரெங்கும் பரவிட
முத்தமிழ் மனமெங்கும் நிறைந்திட
கன்னித்தமிழ் காலமெலாம் நிலைத்திட
பொங்கலோ பொங்கல்!

தமிழ் உறவுகள், தோழமைகள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

மேலும்

அஷ்றப் அலி - தமிழ்க்கிழவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Oct-2018 12:53 pm

இலையுதிர் காலமிது;
பொல பொல பொல
என்றுதிரும் இலைகளை,
பலநிறம் மாறியிங்கவை
புரி வர்ணஜாலங்களை,
சர சர சரவென்று
பாதம்படுஞ் சருகினை,
மெல்லிய குளிர்காற்றென்
மேனி தழுவுதலை,
எங்கோ இருக்கும்
உன்னணைப்பின்
நினைவு தரும்
கதகதப்பில்
மனமுருகி
இரசித்த நான்;

உதிரும் இலைகள்
எதிர்நோக்கும்
உன்னுதிர்வையும்,
நிறமாற்றங்கள்
எம்வாழ்வின்
எதிர்பாராத்
திருப்பத்தையும்,
மிதிபடும் சருகுகள்
மெல்ல (உ)என்னுள்
மறுகிடும் ஆன்மாவையும்,
நினைவுறுத்த;
சில்லென்ற குளிர்காற்று
முகம் படவும்
“ஐயோ! இப்படித்தான்
என்னவளுடலும் ஓர்நாள்
சில்லிடுமோ”
என்று இன்று
மனஞ்சிதைந்து
விக்கித்து நிற்கிறேன்...

அழையா வ

மேலும்

அஷ்றப் அலி - அஷ்றப் அலி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Jul-2018 10:57 am

எங்கே தான் சென்றாய் நீ
உன்னைக் காணாமல்
நான் கரைகிறேன்
இங்கு தள்ளாடித் தவிக்கிறேன் ,
கனவிலே உன் முகம் காணும்
களிப்பிலே கண் மூடினால்
இடை நடுவில் ஓடோடி வந்து
என்னிரவின் நொடிகளை
உன் நினைவுகள் முழுவதுமாய்க்
கவர்ந்து கொல்கிறதே

என் விழிகளை
மட்டும் இப்போது நீ
நெருங்கி விடாதே
நித்திரை இழந்து
நெருப்புக் கோளமாய்
நிர்க்கதியில் கிடக்கும் அவை
கண்ட மாத்திரத்தில்
உன்னைச் சுக்குநூறாய்ச்
சுட்டெரித்து விடும்

அஷ்றப் அலி

மேலும்

ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு அல்லவா ? விரகதாபாத்தில் வெந்து கிடக்கும் விழி தானே முதல் பூவே ! சுடலாம் இல்லை கண்டவுடன் குளிராகவும் மாறலாம் .....ஈற்றில் கண்ணிலாக் காதல் தான் ஜெயிக்குமென நம்புவோமே! கருத்துக்கு மிக நன்றிங்க 18-Jul-2018 4:25 pm
காதல் நெருப்பு சுட்டெரிக்காது சுகம்தானே... 18-Jul-2018 3:39 pm
வாழ்த்துக்கும் வரிகளுக்கும் மிக்க நன்றி அன்பின் ஆரோ! 17-Jul-2018 1:33 pm
நல்ல காதல் கவிதை, அருமையாய் உள்ளது இன்னும் எழுதுங்கள். 17-Jul-2018 1:02 pm
அஷ்றப் அலி - ஜான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Jun-2018 9:02 pm

ஏழ்மை கொண்டாடப்பட வேண்டியது...

சந்தோசம் மட்டுமே ஏழ்மையின் அனுதினத் தேடல்...

அன்பினால் அரவணைத்து வாழ ஏழ்மை போதிக்கும்...

உடுத்த மட்டுமே உடை என உறுதியாக சொல்லித்தரும்...

கனவுகாணும் உயரங்களுக்குப் பறக்க ஏழ்மை கற்றுத் தரும்...

கீழிருந்து மேலேறும்போது சறுக்கும் சறுக்கல்களை சமாளிக்க ஏழ்மை கற்றுத் தரும்...

தொடக்கத்திலிருந்து இலக்கையடையும் அனுபவப்பாடத்தை ஏழ்மை சொல்லிக் கொடுக்கும்...

ருசிக்க சாப்பிடும் நாள் வரும்; இப்பொழுது பசி தீர்க்கும் வழி கண்டறி என சமரசமின்றி தேட வைக்கும்...

சுயநலம் கருதாது உழைக்கும் பாங்கை கட்டமைக்கும்...

ஏட்டிலடங்கா கல்வி பலவற்றை எளிதாக போதிக்கும்...

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே