பொங்குக பொங்கல்
![](https://eluthu.com/images/loading.gif)
பட்டி பலுகப் பலுக
பால் பானைப் பொங்கப் பொங்க
தீமைகள் முறிந்தோட
நன்மைகள் நின்று துலங்க
பொங்கலோ பொங்கல்!
உழவும் தொழிலும் பெருகிட
நிலமும் நீரும் திளைத்திட
வயலும் வாழ்வும் செழித்திட
வறுமையும் வெறுமையும் நீங்கிட
பொங்கலோ பொங்கல்!
தீந்தமிழ் திசைதோறும் நிரவிட
பைந்தமிழ் பாரெங்கும் பரவிட
முத்தமிழ் மனமெங்கும் நிறைந்திட
கன்னித்தமிழ் காலமெலாம் நிலைத்திட
பொங்கலோ பொங்கல்!
தமிழ் உறவுகள், தோழமைகள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!