வெல்லலாம் என்றும் விருந்து - நேரிசை வெண்பா
வெல்லலாம் என்றும் விரு(ந்)து!
நேரிசை வெண்பா
ஒவ்வொரு பாட்டிற்கும் ஒவ்வோர் வடிவமுண்(டு)
அவ்வகையில் தானெழுதி அத்தனைக்குஞ் - செவ்விதாய்
நல்வகை யில்பொருள் நற்றமிழில் சொல்லிவந்தால்
வெல்லலாம் என்றும் விரு(ந்)து!
- வ.க.கன்னியப்பன்

