துப்பட்டாத் தூளியிலே கண்ணன் தரிசனம்
துப்பட்டாத் தூளியிலே கண்டேன் கைக்குழந்தை
அப்பன்ஸ்ரீ நாத்தை அன்பில் தரிசிக்கும்
ஒப்பிலா காட்சியை ஓவியமானது என்னுள்ளே
செப்பலோசை வெண்பாநீ செப்பு
----உதயப்பூர் அருகே அமைந்துள்ள ஸ்ரீநாத் துவார
ஆலயத்தில் இரண்டு பெண்கள் துப்பட்டாவைத்
தூளிபோல் பிடித்து அதில் சிரிக்கும் சிறு கைக்குழந்தைவைத்துக்கொண்டு
தரிசனத்திற்கு எங்களுக்கு சற்று முன் வரிசையில் நின்று கொண்டிருந்த காட்சி
தூண்டிய கவிதை

