ஆசிரியர் பணி

மாணாட்கர் மனக்கண்
அறியாமை அகற்றும்
அற்புத பணி
ஒழுக்கத்தைப் போதிக்கும்
உன்னத பணி
கற்றலில்
கசடுக் களையும் கண்ணிய பணி .
அகிம்சை உணர்வை
உள்ளத்தில் பதிக்கும் உயரிய பணி .
துலாக் கோல் போல்
மாணாட்கரிடம் சமநிலை நடத்தும்
நுண்ணிய பணி .
சாதி ,மத வேறுபாடில்லா
சமத்துவத்தைப் போதிக்கும்
உயரிய பணி .
கற்றலை அகத்தில் நிறுத்தி
புதுமையாய் ,எளிமையாய்
இன்முகத்துடன்
அவன் வசம் உட்புகுத்தும்
நுட்பமான பணி .
வேற்றுமை நீக்கி
ஒற்றுமை உணர்வை
உள்ளத்துள் ஊட்டும்
உணர்வு பூர்வ பணி .
கற்றல் சுமைக்கண்டு கலங்கும்
நெஞ்சங்களைத் தட்டிக் கொடுத்து
தடைகளை அகற்றும்
அழகிய பணி
கடமை ,கண்ணியம், கட்டுப்பாடு
மும்மந்திரமும் செவிப்பாய்ச்சி
வாழ்வியல் வழிநடத்தும்
வளமான பணி
ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது
எனும் மெய் மொழிக்கேற்ப
அவசரத்தில் கற்றதை கற்பிக்காது
நுண்மான் நுழைபுலம் காணும் பணி
பாகற்காயாய்கசக்கும் பாடங்களைத்
தித்திக்கும் தேனாய்
இனிப்பாய் எடுத்தியம்பும் பணி
ஏன் ,எதற்கு ,எப்படி எனும்
வினாத் தொகுத்து
விடையறியும்
மெய்ஞானப்பணி
விஞ்ஞானப் பணி-ஆசிரியர் பணி
இப்பொன்னாளில்
ஆசிரியர் அனைவரும்
மன உறுதிி பூண்டு
உண்மையாய் உழைத்தால்
வெல்லலாம்
நல்லாசிரியர் விருதுதை- நாமும்
அரசிடம் மட்டுமல்ல
மாணாட்கர் உள்ளத்திலும்........




இளையகவி

எழுதியவர் : கா .இளையராஜா .பரமக்குடி (10-Dec-25, 9:34 pm)
Tanglish : aasaan
பார்வை : 13

மேலே