இறைவன்

நமக்கெல்லாம் உருவம் தந்து அதில்
உயிரும் வைத்து உள்ளிருந்து
நம்மை எல்லாம் இயக்கும் இறைவன்
நாம் காணா அருவமாய் இருக்க அவனைத்
நித்தம் நித்தம் மனதில் இருத்தி தொழுது
வேண்டிட அழகாய் பேரழகான தனது
தனக்காய் வடித்துக்கொண்ட திவ்ய
ரூபத்தில் நம் கண்முன்னே வந்து உலாவுவான்
இப்படித்தான் அந்த பரமாத்மனை முற்றும்
உணர்ந்த மாமுனிகள் கண்டு மகிழ்ந்து நமக்கு
தம் தெய்வீக பாக்களால் உணர்த்தி சென்றனர்

யார் சொன்னார் அவனுக்கு உருவமில்லை என்று
அறுவதான் அவன் உருவமும் தாங்கி நிற்பான்
காட்சியும் தந்தான் தருவான் இன்றும் கேட்போர்க்கே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (10-Dec-25, 5:13 pm)
Tanglish : iraivan
பார்வை : 12

மேலே