கோடிட்ட இடங்கள்- ஹைக்கூ கவிதைகள்

1.ஏங்கியது கவிதை..
தன்னில் வாழும் கோடிட்ட இடங்களை
நிரப்ப வேண்டி..

2. காத்திருந்தது கவிதை ஏட்டில்
ஏக்கத்துடன்..
கோடிட்ட இடங்களை நிரப்பி
தன் முழு வடிவத்தையும் பெற வேண்டி!

3. கோடிட்ட இடங்களால் ..
தன் விதியை நொந்து கொண்டு
வாழ்ந்தது ஏட்டில்..
தன் தலையெழுத்தை யாரேனும்
மாற்றியமைக்க வேண்டி கொண்டு..

எழுதியவர் : மீனாதொல்காப்பியன் (8-Dec-25, 11:22 pm)
சேர்த்தது : meenatholkappian
பார்வை : 10

மேலே