எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சிந்தனைத் துளிகள் 1 -------------------------------- நம்மைப்போல் மற்றவர்களும் இருக்க...

  சிந்தனைத் துளிகள் 1
--------------------------------
நம்மைப்போல் மற்றவர்களும் இருக்க வேணடும் என்று நின்னைப்பதும் , மற்றவரின் நடவடிக்கைகள் நமக்கு பிடிக்கவில்லை என்பதற்காக அவர்கள் மீது வெறுப்பை உமிழ்வதும் ,அவரைப்பற்றி தவறான கருத்துக்களை பரப்புவதும் மாபெரும் தவறு . எதிர்பார்ப்புதான் ஏமாற்றத்தின் முதல் படி . மீறித் தொடர்ந்தால் வருத்தமும் வலியும் தான் மிஞ்சும் .  


எண்ணமும் செயலும் ஒன்றானால், அதிலும் அவை அடுத்தவரை பாதிக்காமல் இருந்து, அவர்களுக்கு மகிழிச்சியைத் தருமானால் நமது சிந்தனை சீராக உள்ளது என்பதை பலரும் பாராட்டுவார்கள். நாம் மேலும் சுயநல எண்ணத்தைக் கைவிட்டு நேர் வழியில் செல்வோமானால் நம்மைவிட உயர்ந்தவர் மண்ணில் யாரும் இல்லை. இதனால் நம்மைச்சுற்றி உள்ளவர்கள் நம்மை நன்கு மதிப்பதோடு நமக்கு ஓர் அரணாக இருப்பர் என்பதில் ஐயமில்லை . 

பழனி குமார் 
09.12.2025    

நாள் : 10-Dec-25, 9:34 am

பிரபலமான எண்ணங்கள்

மேலே