தமிழ் மைந்தன் - ஜான் ரிச்சர்டு - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  தமிழ் மைந்தன் - ஜான் ரிச்சர்டு
இடம்:  அயர்லாந்து
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Jun-2019
பார்த்தவர்கள்:  1331
புள்ளி:  34

என்னைப் பற்றி...

தமிழ் இலக்கியங்களின் மீதும், தமிழ்ப் பண்பாட்டு, கலாச்சாரப் பண்பாடுகளின் மீதும் ஆர்வம் அதிகம். சமூகப் பிரச்சினைகளின் தாக்கத்தினால் சமூகத்தின் மேல் அக்கறையுள்ள குடிமகனாக வாழ்வதற்கும் முயற்சி எடுக்கிறேன்.

என் படைப்புகள்
தமிழ் மைந்தன் - ஜான் ரிச்சர்டு செய்திகள்

சிந்தை நிறைந்தவளே
செழிப்பாய் இருப்பவளே
உயிரோடு கலந்தவளே
உயர்ந்து நிலைப்பவளே
மனதைக் கவர்ந்தவளே
மகிழ்வைக் கொடுப்பவளே
இனிதைத் தருபவளே
இனிப்பாய்ச் சுவைப்பவளே

நீ மூத்தவள் தாம்
முதியவள் அல்ல
இளமைச் செருக்கோடு
எப்போதும் இருப்பவள்
நீ பழைமையானவள் தாம்
பழையவள் அல்ல
புதுமைச் சிந்தனையை
புகுத்தி வாழ்பவள்

உம் பிள்ளை என்று சொல
எமக்கெப்பேதும் பெருமைதான்
எப்போதும் நா நிறைந்து
எத்திக்கும் எடுத்துத் தொடுக்க
எம்முடனே இருந்திடுவாய்
வற்றாத நீரூற்றாய்
வழியெங்கும் பொங்கிடுவாய்

வரலாற்றைக் கடந்தவளே
வரலாற்றைப் படைப்பவளே
வளமையாய் செழுமையாய்
நிறைவாய் நேர்த்தியாய்
எங்கெங்கும் நிறைந்தோங்க

மேலும்

சிந்தை நிறைந்தவளே
செழிப்பாய் இருப்பவளே
உயிரோடு கலந்தவளே
உயர்ந்து நிலைப்பவளே
மனதைக் கவர்ந்தவளே
மகிழ்வைக் கொடுப்பவளே
இனிதைத் தருபவளே
இனிப்பாய்ச் சுவைப்பவளே

நீ மூத்தவள் தாம்
முதியவள் அல்ல
இளமைச் செருக்கோடு
எப்போதும் இருப்பவள்
நீ பழைமையானவள் தாம்
பழையவள் அல்ல
புதுமைச் சிந்தனையை
புகுத்தி வாழ்பவள்

உம் பிள்ளை என்று சொல
எமக்கெப்பேதும் பெருமைதான்
எப்போதும் நா நிறைந்து
எத்திக்கும் எடுத்துத் தொடுக்க
எம்முடனே இருந்திடுவாய்
வற்றாத நீரூற்றாய்
வழியெங்கும் பொங்கிடுவாய்

வரலாற்றைக் கடந்தவளே
வரலாற்றைப் படைப்பவளே
வளமையாய் செழுமையாய்
நிறைவாய் நேர்த்தியாய்
எங்கெங்கும் நிறைந்தோங்க

மேலும்

கிராமத்து குதூகல
எண்ணத் திமில்கள்
இனம்புரியா ஏக்கத்தோடே
சுற்றிச் சுற்றி
ஆலிங்கனம் செய்ய
ஊருணிக் குளியலுக்காய்
உள்ளம் எகிறிக் குதித்தது

அடுத்த நாள்
விடியும் போதே
புறப்பட்ட மணித்துளியில்
புதிதாய் சிமிட்டிய சிந்தனைகள்
சிந்தையில் உரைக்க
மறந்துபட்டேன்
மனதின் ஆசையை!

இதனால் சொல்வது
என்ன வென்றால்
இருந்ததைக் கடந்து
மாறியவை மாறியவையாகவே
இருக்கட்டும் - ஒரு நாள் அதுவும்
நிரம்பி வழியும் - அன்று
நான் நீச்சல் பழகிய
ஊருணியில்
நிலவொளியில் நீச்சலடிப்பேன்…

ஊருணி மட்டுமல்ல
உள்ளத்தின் அத்தனை ஆசைகளுமே…

மேலும்

கிராமத்து குதூகல
எண்ணத் திமில்கள்
இனம்புரியா ஏக்கத்தோடே
சுற்றிச் சுற்றி
ஆலிங்கனம் செய்ய
ஊருணிக் குளியலுக்காய்
உள்ளம் எகிறிக் குதித்தது

அடுத்த நாள்
விடியும் போதே
புறப்பட்ட மணித்துளியில்
புதிதாய் சிமிட்டிய சிந்தனைகள்
சிந்தையில் உரைக்க
மறந்துபட்டேன்
மனதின் ஆசையை!

இதனால் சொல்வது
என்ன வென்றால்
இருந்ததைக் கடந்து
மாறியவை மாறியவையாகவே
இருக்கட்டும் - ஒரு நாள் அதுவும்
நிரம்பி வழியும் - அன்று
நான் நீச்சல் பழகிய
ஊருணியில்
நிலவொளியில் நீச்சலடிப்பேன்…

ஊருணி மட்டுமல்ல
உள்ளத்தின் அத்தனை ஆசைகளுமே…

மேலும்

#பதாகைக்_கலாச்சாரம்

ஐயகோ
பதாகை விழுந்து
நன்மகள் சுபஸ்ரீ
நொடிப்பொழுதில் மரணம்
நெஞ்சு பொறுக்குதில்லையே
இதோ இரண்டு மூன்று நாள்
கத்துவோம் கதறுவோம்
சமூக வலைதளப் பக்கங்களிலும்
புதினக் குழுக்களிலும்

பதாகைகள்...
அவர்கள் பதவிகளுக்கான
நுழைவாயில்
உச்சம் தொட்டோர்
சாட்டையெடுப்பர் சவுக்கெடுப்பர்

அதோ அடுத்த பிறந்தநாளைக்கு
ஆங்கோர் பதாகை
அம்சமாய் அலங்கரிக்கும்
அதன் நீள அகல
அளவுகளைத் தாண்டி
நம் வாகனங்களும் சும்மாய்க்
கடந்து செல்லும்

நம்வீடு, நம்மூர்
சுப துக்க காரியங்களிலும்
திருவிழாத் தேவைகளிலும்
நம் பெருமை நிலை நாட்ட
நாமும் பதாகை வைப்போம்

நாம் நேசிக்கும் சுவாசிக்கும்
நாய

மேலும்

#பதாகைக்_கலாச்சாரம்

ஐயகோ
பதாகை விழுந்து
நன்மகள் சுபஸ்ரீ
நொடிப்பொழுதில் மரணம்
நெஞ்சு பொறுக்குதில்லையே
இதோ இரண்டு மூன்று நாள்
கத்துவோம் கதறுவோம்
சமூக வலைதளப் பக்கங்களிலும்
புதினக் குழுக்களிலும்

பதாகைகள்...
அவர்கள் பதவிகளுக்கான
நுழைவாயில்
உச்சம் தொட்டோர்
சாட்டையெடுப்பர் சவுக்கெடுப்பர்

அதோ அடுத்த பிறந்தநாளைக்கு
ஆங்கோர் பதாகை
அம்சமாய் அலங்கரிக்கும்
அதன் நீள அகல
அளவுகளைத் தாண்டி
நம் வாகனங்களும் சும்மாய்க்
கடந்து செல்லும்

நம்வீடு, நம்மூர்
சுப துக்க காரியங்களிலும்
திருவிழாத் தேவைகளிலும்
நம் பெருமை நிலை நாட்ட
நாமும் பதாகை வைப்போம்

நாம் நேசிக்கும் சுவாசிக்கும்
நாய

மேலும்

மகா கவியே மன்னித்து விடு

விடுதலை வேள்வியை விதைத்து
புரட்சியைப் போற்றி
பெண்மையை உயர்த்தி
ஆதிக்க மனப்பான்மையை அகற்றி
அடிமைத்தனம் அகல
அருந்தமிழ் கவிபாடி
தமிழ்த் தாயின் தவப்புதல்வனாய்
தமிழினத்தின் தலைமகனாய்
உதித்த உன்னை உயர்த்திப் பிடிக்க
நாங்கள் இன்று!

களிறு தாக்கி கடும் நோயுற்று
படுக்கையில் வீழ்ந்த உன்னை
மீட்டெடுத்து மீளுயிர் கொடுத்து
தமிழுக்கு புகழ்பாட தழைக்க வைக்க
தடுமாறிய தமிழர்யாம்
உமக்கு இறுதி யஞ்சலி ‍‍
செலுத்தக் கூட மறந்து விட்டோம்
நாங்கள் அன்று! - மாபாவத்தை மன்னித்துவிடு மகா கவியே!

மேலும்

மகா கவியே மன்னித்து விடு

விடுதலை வேள்வியை விதைத்து
புரட்சியைப் போற்றி
பெண்மையை உயர்த்தி
ஆதிக்க மனப்பான்மையை அகற்றி
அடிமைத்தனம் அகல
அருந்தமிழ் கவிபாடி
தமிழ்த் தாயின் தவப்புதல்வனாய்
தமிழினத்தின் தலைமகனாய்
உதித்த உன்னை உயர்த்திப் பிடிக்க
நாங்கள் இன்று!

களிறு தாக்கி கடும் நோயுற்று
படுக்கையில் வீழ்ந்த உன்னை
மீட்டெடுத்து மீளுயிர் கொடுத்து
தமிழுக்கு புகழ்பாட தழைக்க வைக்க
தடுமாறிய தமிழர்யாம்
உமக்கு இறுதி யஞ்சலி ‍‍
செலுத்தக் கூட மறந்து விட்டோம்
நாங்கள் அன்று! - மாபாவத்தை மன்னித்துவிடு மகா கவியே!

மேலும்

பதின்ம வயதில்
யாம் பெற்ற வாழ்க்கை
பண்பான பல நட்பு
பருவ வயதிற்கேற்ற
பரவசமான பல நாட்கள்

கண் ஆடி முன் நின்று
கருத்தாய் கண் மை தீட்டல்
முகம் பளிச்சிட
பல இன்ச்சுக்கு முகப்பவுடர்
பார்த்து பார்த்து லிப்ஸ்டிக்
மீசை முளைக்கா நாட்களிலே
முகச்சவரம் பல நாள்
பல பேருக்கு
அது பொழுது போக்கு

கரம் பிடித்து நட்போடு
நடப்பது உண்டு
நட்பு மிகப்பெற்ற பல பேருக்கு
கண்ணோடு கண் பார்த்து
காதல் வந்து
கண் சிமிட்டுவதுமுண்டு
கனவாய் அதை நினைத்து
கடந்து செல்வதுமுண்டு

பாடப் புத்தகத்தினூடே
பிரபஞ்சனும் வைரமுத்துவும்
ராஜேஷ்குமாரும் வாலியும்
அகத்தா கிறிஸ்டியும்
ஷிட்னி ஷெல்டனும்
தலையணைக்கடியில் தவறாமல்

நடிகர்களும் நடிகைகளும்
வி

மேலும்

நன்றிகள் திருமிகு. வேலாயுதம் ஆவுடையப்பன். 08-Aug-2019 4:11 am
அந்த நாள் ஞாபகம் வந்ததே !! கனாக் காலம் மலரும் நினைவலைகள் ! படைப்புக்கு பாராட்டுக்கள் தொடரட்டும் தங்கள் இலக்கிய படைப்புகள் 06-Aug-2019 2:31 am

நாசித் துவாரங்கள்
சுவாசித்த மண்வாசம்
காதுக்குள் ஒலித்த
சடசட மழைச் சத்தம்
வீட்டு முற்றக் குழாய்க்குள்
வந்திறங்கிய மழை நீர்

வீதியில் கரை புரண்டோடிய
செம்மண் தோய்ந்த பெருவெள்ளம்
செடிகளின் இலைகள் தோறும்
முத்து முத்தாய் மழைத்துளி

மழை நேரத்து
மாலை வேளையில்
மனங்குளிர்ந்த மகிழ்ச்சியுடன்
கையில் காகிதக் கப்பலுடன் நான்

கவலை தோய்ந்த முகத்துடன்
துணை துறந்த
காகிதக் கப்பல் மாலுமியாய்
அந்தக் கட்டெறும்பு

திடுக்கிட்டு விழித்தேன்
சிறுவயது நினைவலைகள்
கனவாக கண்ணயர்ந்த வேளையில்
கனவே கலையாதே!

மேலும்

வாழ்த்திற்கு நன்றிகள் ஆயிரம் திருமிகு. வேலாயுதன் ஆவுடையப்பன். 19-Jul-2019 10:51 am
கனவே கலையாதே! புதுமையான கவிதை வரிகள் பாராட்டுக்கள் 19-Jul-2019 5:42 am
தமிழ் மைந்தன் - ஜான் ரிச்சர்டு அளித்த படைப்பில் (public) velayutham avudaiappan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
11-Jul-2019 3:36 am

வாழிய தமிழ் வாழியவே!

அவள் அமிழ்தினும் இனியவள்
இயல்பாய் இசையாய் நாடகமாய்த் திகழ்பவள்
ஆயிர ஆயிரமாண்டாய் வாழ்பவள்
எனினும் எப்போதும் இளமையாய் இருப்பவள்
உம்மையும் எம்மையும் இணைத்தவள்
உலக மொழிக்கெல்லாம் மூத்தவள்

தொல்காப்பியமும் திருக்குறளும் தொடுத்தவள்
ஐம்பெருங்காப்பியங்களையும் ஐஞ்சிறுங் காப்பியங்களையும் கொடுத்தவள்
அகத்திலும் புறத்திலும் திளைத்தவள்
பக்தியையும் புரட்சியையும் ஒரு சேர ஊட்டியவள்
கல்லில் மட்டுமல்ல கணினியிலும் ஒளிர்பவள்

அவள் நம் தாயவள், தமிழ்த் தாயவள்
வாழிய அவள் வாழியவே!

மேலும்

நன்றிகள் திருமிகு. பாலு. 19-Jul-2019 10:49 am
நன்றிகள் திருமிகு. வேலாயுதன் ஆவுடையப்பன். 19-Jul-2019 10:48 am
தமிழ் மைந்தன் இலக்கியப் படைப்பு புதுமை பாராட்டுக்கள் தொடரட்டும் தங்கள் இலக்கியப் பயணம் தமிழ் அன்னை ஆசிகள் 19-Jul-2019 5:40 am
அருமை 18-Jul-2019 8:28 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

user photo

சக்திவேல் சிவன்

சிங்கப்பூர்
கோவலூர் த.வேலவன்.

கோவலூர் த.வேலவன்.

திருகோவிலூர்
balu

balu

திருவொற்றியூர்

இவர் பின்தொடர்பவர்கள் (4)

இவரை பின்தொடர்பவர்கள் (4)

balu

balu

திருவொற்றியூர்
கோவலூர் த.வேலவன்.

கோவலூர் த.வேலவன்.

திருகோவிலூர்
மேலே