பொங்கலும் போஸ்டரும்

பொங்கல் வந்தது
புதுப் பானையும் வந்தது
புத்தரிசியும் வந்தது
புதுப் படமும் வந்தது
பொங்கி வழிந்தது
எங்கள் வீட்டுப் பானையில்
ஆழாக்கு பாலும்
எங்கள் தலைவரின் போஸ்டரில்
ஐம்பது லிட்டர் பாலும்…
பொங்கலின் புதுப் பரிமாணம்

எழுதியவர் : தமிழ் மைந்தன் - ரிச்சர்டு (15-Jan-20, 9:41 pm)
பார்வை : 3660

மேலே