கவிதை

ஏழ்மை

எதுவோ ஏழ்மை? நண்பா!
எதுவோ?

கிட்ட வேண்டியது
வாய்ப்பிருந்தும் கிட்டாதது
தான் ஏழ்மையோ!
எதுவோ?

பாதி சுதந்திரத்துடன்
பாதுகாப்பை இழந்தது
பெண்ணின் ஏழ்மையோ!
எதுவோ?

மானுடத் துணையும்
உரையாடலையும் இழந்தது
மூப்பரின் ஏழ்மையோ!
எதுவோ?

நிறை வயதும்
நிறைச்சூழலையும் இழந்தது
மரத்தின் ஏழ்மையோ!
எதுவோ?

அட நண்பா!!!
ஒற்றுமை என்றவொன்றால்
இறைவனும் ஏழ்மையாகிறாரே!
இதுவும் ஏழ்மையோ?

ஆம் நண்பா!!
ஏழ்மை தொடரும்
வீறுநடை போடும்
புரியாமையால்.

எழுதியவர் : (15-Jan-20, 5:49 pm)
சேர்த்தது : kvp ramana
பார்வை : 80

மேலே