கௌசல்யா சேகர் - சுயவிவரம்
(Profile)

வாசகர்
| இயற்பெயர் | : கௌசல்யா சேகர் |
| இடம் | : ஜெயங்கொண்டம் |
| பிறந்த தேதி | : 27-Jul-1999 |
| பாலினம் | : பெண் |
| சேர்ந்த நாள் | : 27-Feb-2022 |
| பார்த்தவர்கள் | : 687 |
| புள்ளி | : 46 |
எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குனர்
“இதுதான் விதி” என்று
உன் ஓட்டத்தை பிறர் சொல்ல நிறுத்திட்டால்,
இறந்துவிட்டாயென்று
இறக்கிடுவர் மண்ணுக்குள்.
ஆகவே உன் போக்கில் பயணி.
வீழ்ந்தாலும் விதையென வீழ்,
வேரூன்றி விருட்சமாய் மலர!
- கௌசல்யா சேகர்
ஏன் இந்த தாமதம்!!?
அவசரத்தில் என்னை சிதைத்துக்கொண்டு வெற்றி பெற விருப்பமில்லை.!
விட்டுவிடவேண்டிதானே!!
எதை விட்டு விட வேண்டும் ?? என்னுடனான கனவையா??
விட்டுவிட்டு என்ன செய்ய?
திருமணம் ….
எதற்கு? மனித பிறப்பின் கடமையை செய்து முடிப்பதாக கூறி கனவை மாய்த்து சிக்குண்டு நிற்கவா?
என் பயணம் இது.
எனக்கு இழுத்து பிடிக்கவும் தெரியும், வலையில் மாட்டாமல் நீந்தவும் தெரியும்.
பயணிக்க கற்றுக்கொண்டேன்.
திடமாகதான் இருக்கிறேன்- நீங்கள் எதுவும் வார்தையால் என்னை தீண்டாத வரை.
எனக்கு அவசரமில்லை .
அவ்வளவு அவசரமாக சென்று என் வெற்றியை நிரூபிக்க வேண்டிய தேவையும் இல்லை.
ஆமை போலவே ப
ஒரு கதையை எழுதும் போது,
நான் பிரம்மன் போல உணர்கிறேன்.
ஆதி முதல் அந்தம் வரை –
எனது ராட்சியம் அது.
பாத்திரங்கள் என் விரலில் பிறக்க,
வழித்தடங்கள் என் எண்ணத்தில் திரும்ப,
பயணங்கள் என வசதிக்கு வளைந்து செல்ல –
அது போன்ற சுதந்திரம் வேறேதாவது இருக்குமா?
ஒரு பெண் – தன் கடைசி ஆசையைத் தேடி பயணிக்கலாம்.
ஒரு சிறுமி – பசியால் சிரிக்கலாம்.
ஒரு நிழல் – ஒரு கனவுக்கு உயிராகலாம்.
எந்த பாவமும் என் அனுமதியின்றி நடக்காது.
கூடுதலாக மன ஓட்டத்துடன்
Spotify-யில் என் கதை உலகத்துக்கும் perfectly match ஆகும் ஒரு BGM ஒலிக்கத் தொடங்கினால்
அந்த நிமிடம் நான் தான்!
இந்த பூமியில் உச்ச பாக்கியசாலி ♥️
- க
ஆல்கஹால் இல்லாமல் ஆட்டிபடைக்கிறாய்!!
ஒவ்வொரு நொடி இடைவெளியும்
தெளிவுபெற முடியாமல் மூழ்கி மீள்கிறேன்!!
ஆல்கஹாலை தாண்டிய போதை காதலுக்கு உண்டு என உன்னிடம் பேசிய பின் ஒப்புக்கொள்கிறேன்! சற்று ஞானமும் கொள்கிறேன் போதையின் தவிப்பில்....
- கௌசல்யா சேகர்