சேகர் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சேகர் |
இடம் | : Pollachi / Denmark |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Jun-2011 |
பார்த்தவர்கள் | : 1163 |
புள்ளி | : 8 |
I am a chemical engineer works in Copenhagen, Denmark; my native is Pollachi. My blog is here, plz try to read if possible.
http://www.sekara27.blogspot.com/
Thanks friends.
40 வருடங்களுக்கு
ஒருமுறை மட்டுமே
'காட்சியளிக்கும்' அத்திவரதர்.
வருடம் முழுதும்
'காட்சிப் படுத்துனா'
குடியா முழுகிப்போகும்?
பிறப்பால் ஒரு ... என்ற
இன, மத, சாதிய அடையாளங்கள் தாண்டி
ஒரு குழந்தை என்னும்
எதார்த்தத்தினுள்ளே அடைபடவே
விரும்புகிறேன்!
நான் பேசுவேன்.. என நீயும்
நீ பேசுவாய்.. என நானும்
இப்படியாக நம் கண்கள்
பேசிகொண்டிருந்த காலங்களில்
கண்ணுக்கே தெரியாத தூசியால்
உன் கண்கள் கலங்கியபோது
என் இதயம் கலங்கியது..
அந்த தூசிக்கு
இருக்கும் வலிமைகூட
என் இதயத்திற்கு இல்லாமல்!!..
சில தனிமை பொழுதுகளை கடப்பதென்பது அத்தனை சுலபமல்ல...
ஆம், அது சுயமானதாக அல்லாது
நம் சிநேகத்திற்கு உரியவர்களால் வழங்கப்படுகின்றபோது...
ஒற்றை கோப்பையில் தேனீருடன், இத்தனிமையை சற்று கூடுதலாக நிறப்பிடும்போதும்,
பிடித்தமான சில பாடல் வரிகள் செவிக்கு மட்டும் எட்டி சிந்தையில் ஒட்டாமல் ஓடிடும் போதும்,
சிலர் அள்ளிக்கொண்டுவந்த அலுத்துப்போன ஆறுதல் வார்தைகளை கேட்க துணிவின்றி கதவடைத்து, நமக்கு நாமாகவே
ஓர் சிறை எழுப்பும்போதும்,
இன்னும் இன்னும் பலவகையில்
இத்தனிமை நம்மை சில நினைவுகளால் நெருக்கிடும்போதும்
அத்தனை சுலபமானதாக இருப்பதில்லை,
இத்தகைய தனிமைப்பொழுதுகள்...
****பிரபஞ்ச தேடலில்
முற்றும் விளங்கா அறிஞன் போல்
உந்தன் தேடலில்
அந்தம் பெறாமல் ஓய்கிறேன்!
****கரை தழுவும் அலை போல்
வீசி வீசி மாய்கின்றன
ஆழி மனதுக்குள்
உந்தன் நினைவுகள் !
****கண்ணில் வந்த நோயாய்
எந்தன் பார்வை எல்லாம் நீயாய்
அங்கிங்கெனாத படி எங்குமாய்
யாவையுமாய் நீயே!
****வரமாய் வேண்டும் ஒரே ஒருநாள்
உன் நகத்தின் அழகை முழுதும் ரசிக்க
ஆயுட்கால ஜெபமாய்
உந்தன் பெயரே வேண்டும் !
****உயிர் அடங்கும் நேரத்தில்
என் கண்மணிக்குள் நீ வேண்டும்
நம் காதல் வாழ்வு இது
கடைசி வரை வேண்டும்!
உதித்த சூரியனும்
உறங்க செல்லும் வேளையில்
சிவந்த கீழ்வானத்தில் உன்
சின்ன முகத்தை வைத்தால்
மாலை நிலா வந்ததென
மல்லிகையும் மலருமே!!!...
-- Sekara
காதலின் வலியை கடவுள்
கண்டிருக்க சாத்தியமில்லை!!!..
கண்டிருந்தால் படைத்திருக்கமாட்டான்
காதல் என்ற ஒன்றை!!!
ஆமாம்... கடவுளே கண்டிராதே
கானகம் "காதல்"!!!..
-- Sekara
உன்னை பாருக்கும் முன்
கர்ப்பிணி
தாயின் பிரசவ
வலியையை அறியாத
குழந்தையாய் என் காதல் !!
செடியில் பூத்த
பூவின் வாழ்நாள்
அறியாத
கிளையாய் என் காதல் !!
அறுவடை நாள்
அறியாது தலை சாய்த்து
வணங்கும்
நெற்பயிராய் என் காதல் !!
எங்கே வளைவு
வரும் என்று
அறியாது பாயும்
நீரோடையாய் என் காதல் !!
எதிர் வரும்
எதிர்காலத்தை
அறியாத
பேதையாய் நான் !!
உன்னைக் கண்ட அந்த நொடி
எனையே நான் கண்ட நொடி !!
என்னோடு நீ பேசுகையில்
எழில் கொஞ்சும் பேச்சால்
எனை மறந்து நிற்கிறேன் !!
உன் கைக்கோர்த்து நடக்கையில்
விண்ணவனோடு நான் என
வியந்து தான் போகிறேன் !!
உன் மார்பில் சாயும் போது
மேக தேகத்தின் ஓரத்தில்
நிலவாய் நான் !!
இத்தனையும் உன்னால் தோன்றியதானால்
இதுவரை நான் கண்டிராத
சுவாரசியம் நீ !!