துரைராஜ் ஜீவிதா - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  துரைராஜ் ஜீவிதா
இடம்:  மேல்பட்டம்பக்கம்
பிறந்த தேதி :  07-May-1984
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Sep-2019
பார்த்தவர்கள்:  520
புள்ளி:  84

என்னைப் பற்றி...

எனக்கு கவிதை எழுதுவது பிடிக்கும் இயற்கையோடு கவிதை வார்த்தைகள் ரொம்ப பிடிக்கும்

என் படைப்புகள்
துரைராஜ் ஜீவிதா செய்திகள்
துரைராஜ் ஜீவிதா - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Feb-2021 8:19 pm

தாவரங்கள்
தலையாட்டி வா!வா!!
என்றழைக்க

பூமி
புன்னகைத்து கூப்பிட

மேகங்கள்
மயக்கத்தில் பின்னி விளையாட

மழை
புத்துணர்ச்சியில் பூமியில்
துள்ளி குதித்து விளையாட

சிறார்கள்
தண்ணீரில் போடும் ஆட்டம்க்கண்டு

தவளைகள்
சந்தோசத்தில் ஆறவாரமிட

மின்னல்
ஒலியெழுப்பி அலங்கரிக்க

இடி
பின்னனி இசையை இசைத்திட

வானவில்
வட்டமிட்டு காட்சியைப்படம் பிடிக்க

பூலோகமே
ஆட்டம் பாட்டம்
கொண்டாட்டத்தில் இருக்க

சிலருக்கு
மட்டும் தடை உத்தரவு

சூரியன்
சந்திரன் நட்சத்திரங்களுக்கு
நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள தடை

இது
சற்று ஏமாற்றம்

.....துரைராஜ் ஜுவிதா.....

மேலும்

துரைராஜ் ஜீவிதா - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Oct-2020 7:33 pm

அழிக்காதே! அழிக்காதே!
விவசாயத்தை அழிக்காதே!

கார்ப்பரேட் முதலாளியிடம்
கையேந்தி நிற்காதே!

பாரதத்தின்
முதுகெலும்பு விவசாயம்
அதை உடைச்சிட்டா நிற்காதே!

உங்கள்
அரசாங்கம்

அவர்கள்
சேற்றில் கைவைத்தால்
நீ சோற்றில் கைவைப்பாய்
மறவாதே!

சோறுபோடும்
தேய்வத்தை சோதிக்காதே
தெய்வம் கோபம் கொண்டால்
நாடு தாங்காதே!

வள்ளலார்
சொன்னார் வாடிய பயிரை
கண்ட பொழுதெல்லாம்
வாடினேன் என்றார்

இன்று விவசாயிகள்
வாடிய பயிரை கண்ட போழுதெல்லாம் உயிரை விட்டான்

வள்ளலார்
மிஞ்சும் விவசாயிகள்

யானைகளை
கட்டி ப்போரடிச்சி சோறு போட்ட
புண்ணிய பூமியில்

ஒரு வேளைச்சோற்றுகு
கையேந்தி நிற்பதா?
என் கொடுமையோ!

இதை கண்ட
உள்ளமும் உறைந்தது
இரத்தம்

மேலும்

துரைராஜ் ஜீவிதா - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Sep-2020 3:05 pm

குழந்தை பருவத்தில்.....


பெண்ணே! நீ பிறந்ததும்
மகாலட்சுமி வருகை! என்றார்கள்

நீ தத்தித்தத்தி நடக்கையில்
தங்க தேர் வருகை! என்றார்கள்

நீ மழலையில் மொழி பேசுகையில்
மகிழ்ச்சியின் உச்சம் என்றார்கள்

வளர்ந்தப் பின்......


கவ்வைக்கு ஆழ்ப்படுத்தி அடிமைப்படுத்த தடைவிதிப்பதோ!
என்ன நியாயம் சொல்?

காழகத்தில் குறைக்கண்டீர் காழகம்
அணிவதில் சுதந்திரம் இல்லையோ!

குரம்பையில் பிறந்தாலும் விண்வெளியை!ஆளப்பிறந்தவர்கள்

சகடம் பிடித்து நடந்து பழகும் சிறுபிள்ளையில்லை வானூர்தியை!
இயக்கி செல்லும் பாவைகள்

ஓர்வின் ஊற்று சிறகடித்து
பறக்கும் பறவைகள்

சிற்றில் கட்டி விளையாடும் பிள்ளை
என்று நினைத்தாயோ!
சிகரத்தை உருவாக்கு

மேலும்

துரைராஜ் ஜீவிதா - Sam Saravanan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Sep-2020 8:21 pm

---------
தொலைவில் தெரியும்
தென்னையின் அழகு
அருகில் தெரிவதில்லை..
அருகில் தெரியும்
ரோஜாவின் அழகு
தொலைவில் தெரிவதில்லை..
இளமையில் இருக்கும்
முகத்தின் அழகு
முதுமையில் இருப்பதில்லை..
சிலர் மனதில் இருக்கும்
அகத்தின் அழுக்கு
முக அழகில் தெரிவதில்லை..
பலர் மனதில் இருக்கும்
அகத்தின் அழகு
முக அழுக்கில் தெரிவதில்லை..
அழகாய் இருக்கும்
அழகுகள் யாவும்
அழகுடன் முடிவதில்லை...
நிரந்தரமில்லா அழகை
எண்ணி தன்னிலை
தடுமாற தேவையில்லை..
அழகை நினைத்து
அகங்காரம் அடைய
ஆண்டவன் விடுவதில்லை..
---------------
சாம்.சரவணன்

மேலும்

நன்றி இளவல்! 28-Sep-2020 11:22 am
அருமை அருமை 28-Sep-2020 11:18 am
நன்றி பிரியா! 26-Sep-2020 3:57 pm
அகத்தின் அழகு முக அழுக்கில் தெரிவதில்லை.. அழகாய் இருக்கும் அழகுகள் யாவும் அழகுடன் முடிவதில்லை... நிரந்தரமில்லா அழகை எண்ணி தன்னிலை தடுமாற தேவையில்லை.. அழகை நினைத்து அகங்காரம் அடைய ஆண்டவன் விடுவதில்லை arumai unmaiyana varigal ...... 26-Sep-2020 2:15 pm
துரைராஜ் ஜீவிதா - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Sep-2020 9:04 pm

என்னை
அழிக்க நினைக்காதே!

உன்னை நீயே
அழித்துக்கொள்கிறாய்!

காடுகள்...

மேலும்

துரைராஜ் ஜீவிதா - சிம்மயாழினி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Sep-2020 1:07 pm

முண்டாசு கவி பாரதியே
திரும்பி வா !

அச்சமில்லை அச்சமில்லை
என்றாயே!

இன்று அச்சத்தோடு வாழும்
மானிடனை பார்க்க வா !

புதுமைப்பெண்கள் வாழும்
பூமியை பார்க்க வா !

ஆண்மை எதுவென்று கூற
அழியாத தமிழில்;
மீண்டும்
உனை
அர்ப்பணிக்க வா !

இயற்க்கை சக்தியை
அழிக்க துடிக்கும்,
சொற்ப மனிதனை;
உன் கோல் கொண்டடித்து
புத்தி
புகட்ட வா !

பசுமை மாறாதிருக்க;
பஞ்சம் தலைவிரித்து
ஆடாமல் இருக்க;

*மீசை துடிக்கும் பாரதியே*

மீண்டும் இம் மண்ணில்
ஓர் பிறப்பெடுத்து வா !

மேலும்

இங்கேயே ஒரு மிசையிலா பாரதி இருக்கும் போது இன்னும் ஒரு பாரதி வேண்டாம் 12-Sep-2020 8:09 pm
வேண்டுகோள் மலர ..பிரார்த்தனைகள் . 12-Sep-2020 4:44 pm
உங்கள் கோரிக்கையை ஏற்று இறைவன் மற்றோர் பாரதியை உருவாக்கி மண்ணிற்கு அனுப்புவான் நம்புங்கள் நானும் நம்புவேன் இதையே விரும்பி வாழ்த்துக்கள் சகோதரி 11-Sep-2020 1:53 pm
துரைராஜ் ஜீவிதா - கனிஷ்கா ஜெயக்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Sep-2020 12:05 pm

நான் கவிஞன் அல்ல

நான் கவிஞன் என்று ஊர் நம்புகிறது..
ஆனால்..
நான் கவிஞன் அல்ல
நான் ஓர் மொழிபெயர்ப்பாளன் மட்டுமே!
உன் விழிகள் வீசிடும் வார்த்தைகளையும்..
உன் அடர்ந்த மௌன மொழியின் அழகையும்..
உன் இதழோரம் பூக்கும் புன்முறுவலையும்..
நான் மொழிபெயர்க்கிறேன்..
அது கவிதையாய் வடிவம் பெறுகிறது!!
நான் கவிஞன் ஆகிறேன்!!!

என்னை 'கவிஞன்' ஆக்கும்
'கவிதை' நீ..!!!
- கனிஷ்கா ஜெயக்குமார்

மேலும்

நன்றி அண்ணா.. 12-Sep-2020 8:18 pm
அருமை தோழா 12-Sep-2020 7:47 pm
துரைராஜ் ஜீவிதா - துரைராஜ் ஜீவிதா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Aug-2020 8:33 pm

கண்கள்
மூடி திறக்கும் முன்
எதிரில் நிற்க

நீ
என்ன கடவுளா_இல்லையே!

ஆனால்
கண்களை மூடினால் மட்டும்
கண்களுக்குள் தெரிகிறாய்!

கனவில். ....

மேலும்

துரைராஜ் ஜீவிதா - S UMADEVI அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Aug-2020 3:08 pm

தேன் கூடு

இனிப்புப் பெட்டக
வசதியுடன்
இயங்கும்
பொது நல வங்கி!

சு.உமாதேவி

மேலும்

அருமையான கவிதை 01-Sep-2020 8:38 am
துரைராஜ் ஜீவிதா - துரைராஜ் ஜீவிதா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Oct-2019 10:09 am

ஒரு
குடைக்குள்
நம்மிருவரைவும்
சிறைபிடித்த-தோ
மழைத்துளிகள்

மேலும்

நன்றி 29-Aug-2020 3:40 pm
எழுதாத தூண்டுகிறீர்கள் ----எழுதத் தூண்டுகிறீர்கள் என்று படிக்கவும் . 12-Aug-2020 9:57 am
ஆமாம் ஆமாம் இடை அணைத்து நனைந்து நடந்தால் கையில் இந்தக் குடையும் ஏதுக்கடி ? காதலில் அதுதான் முழு விடுதலையடி ! மழையும் நனைதலும் காதலுக்கு இன்பம் குடையே மடங்கி ஒதுங்கு ! ----வள்ளுவர் வழியில் குடைக் காதல் ஹைக்கூ வில் சொல்லுவோமா ? குடை நனை இடை அணை இது மழைக் காதல் ! -----பிடிச்சிருக்கா ஜீவிதாஜி ? சிறு கவிதைகள் வழி புதிதாய் எழுதாத தூண்டுகிறீர்கள் பாராட்டுக்கள் 12-Aug-2020 9:55 am
துரைராஜ் ஜீவிதா - துரைராஜ் ஜீவிதா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Oct-2019 10:00 am

என் தூய மனதில்
கலப்படம் செயிதாயி
உன் காதலால்

மேலும்

காதல் கலப்படம் நன்று . அரசு நடவடிக்கை எடுக்க முடியாது செய்தாயி என்பதைவிட செயிதாயி நல்லாயிருக்கு . 12-Aug-2020 9:35 am
மேலும்...
கருத்துகள்

மேலே