உயிராக நீ உரமாக நான்
உயிராக நீ.. உரமாக நான்..
கொட்டும் மழையில்..
சாலையோர மரத்தடியில்..
நீ நிற்கயில்..!
உன் காலடி மண்ணாக
நான் மாற வேண்டும்..!
நீ கொய்து விட்டு எறிந்த கொய்யா கனி..
உன் மேனி பட்டு விழும் மழைத்துளி..
இவையனைத்தும் சேர்ந்து
அவ்விதைகளுக்கு உயிரூட்ட வேண்டும்..!
துளிர வேண்டும்..!
உயிராக நீ.. உரமாக நான்..!!!
- கனிஷ்கா ஜெயக்குமார்