ஊமை வலிகள்
புறக்கணிக்கப்பட்ட புரிதலால்...
அழையா விருந்தாளிகளாய்..
ஆற்றாமையும் அழுகையும்!
புறக்கணிப்போர்க்கு புரிவதில்லை..
புறக்கணிக்கப்படுவோரின் வலி..
' மறதி ' என் சில நேரம்
ஆறுதல் அடைந்தாலும்..
நின்று விட்டது நினைவு மட்டும்..
தழும்பாகாமல் இன்றும்
ஊமை வலிகளாய்..

