மின்னுகாசு
மின்னுகாசு, மின்னுகாசு!
@@@@@@
காசை அந்தப் பாட்டி மின்னச்
சொல்லறாங்க. அதை என்னன்னு
கேட்டுப் பார்க்கணும். பாட்டி,
@@@@@@
என்னடாப்பா?
@@@@@@@
காசை கீழ போட்டுட்டு அதை மின்னச்
சொல்லறீங்களா?
@@@@@@
போடா போக்கத்தவனே. நான் அந்தக்
காலத்து அஞ்சாம் வகுப்புடா.
இன்னிக்கு அந்தப் படிப்பு பத்தாம்
வகுப்புக்கு சமம்டா.
@@@@@@
அது சரிங்க பாட்டி. எதுக்கு
'மின்னுக்காசு, மின்னுகாசு' -ன்னு
சொல்லிட்டீருந்தீங்க?
@@@@@
இந்திப் பேரு வெறிபிடிச்ச எம் பேரன்
அவனுக்குப் பிடிச்ச பேரை அவம்
பையனுக்கு வச்சுட்டான். அந்தப்
பேரை என்னால அப்பிடித்தான்
கூப்பட முடியும். எங் கொள்ளுப்
பேரன் பேரு
என்னங்கிற இந்த அட்டையில எம்
பேரன் எழுதி வச்சிருக்கிறான். அது
இந்திக்காரங்க அவுங்க பேரோட
சர்ருநேமுன்ன்னு ஒரு பேரையும்
சேத்து வச்சுக்குவாங்கலாம். அது
மாதிரி சர்ருநேமு தான் எம்
பேரனோட மகன் பேரு. இந்தா நீயே
அந்தப் பேரைப் படி.
@@@@@@@
மின்காஸ் (Minhas). ஓ... இந்தப்
பேரைத்தான் 'மின்னுகாசு,
மின்னுகாசு' சொன்னீங்களா?
@@@@@@@
ஆமாம்டா அப்பா.
@@@@@@
சரி. நான் வர்றேன் பாட்டி.

