சுகமான நிமிடங்கள்

என்னை நனைத்து மகிழ்ந்தது மழை..
என்னை தழுவி நெகிழ்ந்தது தென்றல்..
என்னை வரவேற்று மலர்ந்தன மலர்கள்..
என்னை மயக்கி அகன்றது அந்தி நேரம்..

என்னை பார்த்து கண் சிமிட்டியது அந்தியில் விண்மீன்..
என்னை தேடி தேய்ந்தது இரவில் நிலவு..
நிழல் எண்ணங்கள் நிஜமாகுமோ?
எண்ணி மகிழ்கிறேன் அழகிய தருணங்களை!!

எழுதியவர் : மீனாதொல்காப்பியன் (21-Dec-25, 6:29 pm)
சேர்த்தது : meenatholkappian
பார்வை : 23

மேலே