பூக்கள்
1.எப்படித்தான்
சிரித்து கொண்டிருக்கிறாய்
பூவே..
சிறிது நேரத்தில்
மடிய போவதை
மறந்து..
2. பூவே..
அப்படி என்னத்தான்
ரகசியம் பேசுகிறது
காற்று உன்னிடம்?
வானம் கோபம் கொண்டு
சிவக்கிறது?!
3.பூவே..
உன்னோடு போட்டியிட
விருப்பமில்லாத தால்
வருகிறது நிலவு
இரவில்!
4.பூவே..
உன் மென்மையை அறிய
மூலமாகத்தான் பிறக்க வேண்டும்
நானும்!

