நீர் குமிழிகள்

1.எண்ணற்ற என் எண்ணங்கள்
நீர்குமிழிகளாய் ..
உன்னையே சுற்றி சுற்றி!
2. நீர்க்குமிழே..
நீ காற்றை சிறை செய்ததால்..
உன்னை சிதைத்ததோ காற்று?!
3. நீர்க்குமிழே..
மிதந்து கொண்டிருக்கும்
என் இதயம்
வெடிக்குமோ
உன்னைப் போலவே..
4.நீர்க்குமிழே..
எனக்கும் ஆசை தான்
உன்னைப் போல் மிதக்க
எத்திசையிலும்...
இலவசமாக..
5. நீர்குமிழ் ஆசைகள்
நிறைவேற்றுவதில்லை
எப்போதும்!
6. நீர்க்குமிழே..
ஆதவனை நோக்கி செல்கிறார்..
ஆதவனால் மறையப்போவதை
மறந்துவிட்டு!

எழுதியவர் : மீனாதொல்காப்பியன் (13-Nov-25, 12:09 am)
சேர்த்தது : meenatholkappian
பார்வை : 9

மேலே