கவிபாரதீ - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : கவிபாரதீ |
இடம் | : தமிழ்நாடு |
பிறந்த தேதி | : 08-Aug-1974 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 01-Aug-2021 |
பார்த்தவர்கள் | : 1712 |
புள்ளி | : 130 |
மத்திமம் தொடும் என் வாழ்வில், நான் நடந்த பாதையில் ஒரு பார்வை.நான் நடந்த சுவடுகள் மட்டும் காணாமல்.சுவடுகள் பதிய மீண்டும் ஒரு புதிய பயணம்.
தும்பை மனத்துடன் சேற்றில்
முளைத்த செந்தாமரை
உழவன்...!!!
கவிபாரதீ ✍️
உயிர் உள்ளிருந்து
இதமாய் சிலிர்க்கும் -அதே
நொடியில் நெஞ்சம்
பஞ்சாய் பறக்கும்
பரவசத்தில்....
அன்றலர்ந்த மலராக
பழக்க மில்லா
வெளிச்சக் கீற்றில்
பொடி விழிகளை....
திறந்திடும்....
உன்தன் உதிரம்
உள்ளங் கைகளைத்
தொடும் நொடியே
மனிதனின் ஈடில்லா
வாழ்நாள் பரவசம்....
கவிபாரதீ ✍️
மறைந்திருந்து ஆட்டுவிப்பவன் ஒருவன்
அண்டத்தின் அத்துணை உயிர்களும்
அவன் கரங்களின் பொம்மைகள்
அறிந்திருந்தும் இவற்றை, அகங்காரம்மிக
ஆடுகிறான் தலைகால் புரிந்திடாமல்....
பிரளயம் எழுந்தால் ஆட்டுவிப்பவன்
மனதினில், மீண்டும் சுனாமியாக
உருவெடுத்து உருகுழையும் உயிர்கள்
ஆனால் அகங்கார ஆட்டம் ஆடுபவன்
ஆறறிவு அழிவிற்கு உட்படுவது
ஐந்தறிவும் விதியின் சதியோ?
கவிபாரதீ ✍️
பரத்தையர் வாசத்தில் வாசம் பிடித்த
கோவலனின் சக தர்மினி பன்னிரண்டு ஆண்டுகளாக ஈன காமுகன் வரவிற்காக வழிமேல் விழி வைத்து காத்திருந்த நீ பத்தினி தான் சந்தேகமில்லை சகியே....
பால்குடிமறவா சிறுமிக்கு மணம் மென்பதே
இன்றைய சமூகம் ஏற்காத ஏற்பாடு,
பரத்தை சகவாசத்தில் பரிதவிக்க விட்ட
மணாளனை மனதில் வரித்து மாசற்று
காத்திருந்த கண்ணகியின் மன வேதனை
குருதிகொட்டும் இதயத்தை கசக்கிப் பிழிவதாம்....
மாற்றம் ஏற்று மணாளனுடன் மதுரை
அடைந்த உன் விசாலமனம் கண்டு
மயிற்கூச் சடைகிறேன், சிரம்தாழ்ந்த முதற்கண் வணக்கம் சமர்ப்பணம்.
காற்ச்சிலம்பை கொடுத்த உன் பற்றற்ற
தன்மையும் மகிழ்வுக்கு உரியது குலமகளே....
காவியம்
இருள்சூழ்ந்த பனிவனம் - தடம்
தொலைத்த தலைவி தனியலாய்
தளிர்மனம் விதிர்க்க விரைந்தாள்
நடுநிசியில் நாற்புறமும் கண்வைத்து.....
தடுமாறினாள் காணாமற் - தடம்,
பிறந்தது இனம்புரியாவலி இதயத்தில்
கனற்கண் கொந்தளித்து காய்ந்தது
மனம் மாற்றம் புரியாது....
உறுதி பற்றி திடத்துடன் - தடம்
பதித்தாள் விட்டுவிலக வனம்,
இடித்துரைத்தது இதயம் தன்
இனம்காணாமற் எவ்வாறு விலக?
முத்துகளாய் வியர்வை முகநிலவில்
சுரக்க சுறுசுறுபான பூமேணியள்
நடையழகை கண் டுணர்ந்த
வழிப்போக்கன் விழி மின்ன
மதிமயங்கித் தன் - தடம்
மாற்றினான் தலைவி வழியில்,
தொடரும் கரிய உருவில்
கதிகலங்கி காணு தற்கறிய
இறைவனை அழைத்தாள்
இக்கரைக்கு அக்கரைப் பச்சை...
பூமியிலிருந்து பார்ப்போருக்கு
அழகு முழுநிலவு
(சந்திராயன் ௩ காட்டிய சந்திரனின் விஹார
ரூபம் பார்த்து நகைப்போருக்கு ; சந்திரன்
கவிஞன் உள்ளத்தில் ரூபவதியே -வாசவன்)
கார் மேகமே கருங்குழலாய்
சூழகன்னி யவள்மனம் கறுக்க
சோகத்தில் வீற்று இருந்தாள் விண்வெளியில்....
கவிபாரதீ ✍️
சோகத்தில் சொக்கித்
தவிப்பதும் சுகம்தான்
அது என்னவளின்
நினைவாக இருந்தால்.......
கவிபாரதீ ✍️
தென்றல் நான் தெவிட்டாதவள்
மனிதன் ஆனந்திக்கும் சுகம்
நொடிப் பொழுதும் நில்லாமல்
பயணிப்பேன்....
பாற் கடலையும் கடந்திடுவேன்
கடலுடன் உறவாடிக் கவிழ்த்து
கலங்காமல் கரை தொடும்
பேரலை நான்...
இழிவாய் பேசும் மனிதா
அழுத்தி நினைவில் பதி,
சுவாசத்தால் சுகம் கூடும்
வாழ்வு செழித்திடும்...
இயற்கையை புறம் தள்ளி
இயந்திரத்தை நாடும் ஆறறிவு
இயந்திரம், மனதில் மருகும்
இழந்ததை அறிந்து இறுதியில்....
எந்தன் உடன்பிறப்பை வீழ்த்திப்பின்
உறுத்து விழித்து முறைத்தாலும்
துள்ளலுடன் தென்றல் - நான்
தோன்றுதல் இயலாது...
தவற்றைத் திருத்தி தவறாமல்
நட்டு வளர்த்திட நானும்
தோதாக தினம் தினம்
தவறாமல்
நித்தம் என் முகத்தில்
புத்தம் புதிதாக "மலர்ச்சி"
மலர்ந்து விகசிக்கின்றது...!!!
என் கற்பனை வானில்
எழும் சீரிய சிந்தைதனை
கவிதையாய் பிரசவிக்கும்போது...!!!
முத்தம் ஒன்று தந்தெனது
மலர்ச்சி கொண்டாட படும்
பிரசவித்த கவிதைக்கு பிரசுரிக்குமுன்...!!!
கவிபாரதீ ✍️
சிறகடித்து பறக்கும் வயதில்
செல்லமாய் ஓர் வார்த்தை
செவி வந்து சேர்ந்தாலும்
மனம் மயங்கி மகிழும்....
பதின் வயதில் பள்ளியில்
சிதறிய கவனம் குவிந்தது
பள்ளித் தோழன் மீது,
ஆசை மிக வரைந்தேன்
ஒர் கடிதம்....
தூரிகை கொண்டு தூரலாய்
வண்ணம் தூவி தீட்டினேன்,
ஆடவன் கைபற்றிய காரிகையும்
இடையினில் இருவரின் துடிக்கும்
இதயம் ....
என் மன வானின்
எண்ணங்களை துரிதமாக
தூவினேன் தூரிகை கொண்டு
ஓவிய காரிகையினுள்...
பின் குறிப்பினில், "யென்னிதயச் சொற்களை அறிந்திட யெனை
ஊன்றி கவனித்தால் மட்டுமே
விழிகளுக்கு தென்படும்".....
இதயத்துடிப்பு மிக கடிதம்
கை மாறியது என்னவனிடம் ,
மனம் கவர்ந்தவன் மன
5 . காதலில் கரைந்த நொடிகள்
திலோத்தமா பைக்கில் இருபுறமும் கால்களை வைத்தபடி ஏறி அமர்ந்து அவன் தோள்களை பற்றிக் கொண்டாள்.
மெதுவாக பைக் கிளம்பியது. திலோ வெகு மகிழ்ச்சியாக உணர்ந்தாள். இயல்பாகவே திலோவுக்கு பைக் இல் செல்வது மிகவும் விருப்பமான ஒன்று அதுவும் மனம் கவர்ந்த நாயகனுடன் செல்லும்போது கசக்குமா என்ன என்று மனதில் நினைத்து உள்ளுக்குள் புன்னகைத்துக் கொண்டாள்.
இன்னும் கொஞ்சம் வேகமாக ஓட்டினால் சூப்பரா இருக்கும் ரகு என்றாள்.
அவள் கூறியதைக் கேட்டு உதடுகள் பிரியாது புன்னகைத்தான் ரகுராமன். இன்று திலோ மிகவும் ஆனந்தமாக இருக்கின்றாள் என்று நினைத்துக் கொண்