மறைந்தது மனிதம்
முண்டாசு கவிஞனின்
நூற்றாண்டுகள் கடந்த
மூலமந்திரங்கள் நம்முள்
உலாவினாலும்.....
சகமனிதர்கள் யாவரும்
சகோதர சகோதரியென்ற
பண்புகள், முளைவிட்ட
உடனே மூளையில்
பதிவிடப் பட்டிருப்பினும்.....
ஒரே கருவறையின்
சக பயணியாயினும்
முன்பின் பயணித்திருப்பினும்
பாசமிகு போர்களம்
யாவுமின்று பயனற்று
போனதுவே.....
ஆயிரம் பண்பாடுகள்
பண்பட்ட பாரதத்தில்
இன்று பெண்னென்ற
உரு மறைந்து
பெற்றவன் பார்வைக்கும்,
மகளே வடிவுகள்
நிறைந்த சதைப்
பிண்டமாய் மட்டும்.....
மாசற்ற மனங்கள்
மறைந்துப்பல மாமாங்கம்
கடந்தாயிற்று, மிருகமாய்
மாறி உலாவுகின்றான்
சகமனி தனென்ற
போர்வையிலே......
கவிபாரதீ ✍️