இலையுதிர் காலம்
1. இலை ஆடை களைந்து..
மொட்டையாய் நின்றது மரம்..
மழை வர வேண்டி..
2.வாழ்ந்தோம் ஒன்றாக
மடிவோம் ஒன்றாகவே..
என் கூறிக்கொண்டே
மண்ணைத் தழுவின
பழுத்த இலைகள்..
இலையுதிர் காலம்!
3. விழுந்து விட்ட இலைகளை பார்த்து
கூறியது மரம்..
என் பலம் வேரே என்று!!
4. தன்னை மறைத்த
இலைகள் மறைந்தாலும்..
மறப்பதில்லை மரத்தை
பறவைகள்..
வாழ்கின்றன கூடுகள்
வெற்று மரத்திலும்...

