உவமைக் கவிஞர் சுரதாவைப் போற்றுவோம்

#உவமைக் கவிஞர் சுரதாவைப் போற்றுவோம்

"நாட்டின் பெருநெருப்பாம் நம்பிக்கை மோசடியாம்"
பாட்டினிலே பாடி வைத்தார் சுரதா
வாட்டித்தான் வதைக்காதோ ஆதலினா லதனை
ஆற்றினிலே மூழ்கடிப்போம் வா.. வா.. வா..!

ஆசை யலங்காரமுடன் அடுப்படியில் சிக்கனமாம்
நேசமுடன் சாற்றுகிறார் நெஞ்சத்தில் ஏற்றிடுவோம்
பூசை வழிபாட்டினிலும் பொருளிழப்பைத் தவிர்த்திடலாம்
காசு பணம் சிக்கனத்தைக் கொள்..கொள்..கொள்..!

அன்புடையாள் இனிப்பாளாம்
அமுதுந்தேனும் இனிமையில்லை
மின்னுமவர் பாக்களிலே ஒளியா யுவமைகளும்
கலப்புமணத் தாலொழியும் சாதிகள்
என்றவரின்
நலங் கூட்டும்பல கவிதைவழிச் செல்செல்செல்..!

திரைத்துறையில் பாடல்கள் தெள்ளுத்தமிழ்க் கவிதைகள்
சிறைபிடித்தார் நெஞ்சங்கள்
செந்தமிழ்தா னச்சிறைகள்
பணிவிடைபா வேந்தற்குப்
பாங்குடனே செய்தவரை
கனிமொழியால் ஏற்றிடலாம்
கரங்குவித்து வணங்கிடலாம்
வா வா வா..!

#சொ.சாந்தி
#மீள்

எழுதியவர் : சொ.சாந்தி (23-Nov-25, 8:07 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 5

மேலே