மலர்விழி வந்தாளா பூப்பறித்தாளா

பனியில் நனைந்திடும் மார்கழிப் பூவே
கனியிதழ் காதலி கார்குழலி இன்று
மலர்விழி வந்தாளா பூப்பறித் தாளா
மலரே எனக்குச்சொல் வாய்
---இன்னிசை வெண்பா

பனியில் நனைந்திடும் மார்கழிப் பூவே
கனியிதழ் காதலி மான்போல் --இனிய
மலர்விழி வந்தாளா பூப்பறித் தாளா
மலரே எனக்குச்சொல் வாய்
-----நேரிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (24-Nov-25, 12:16 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 5

மேலே