இப்படிக்கு தென்றல்

தென்றல் நான் தெவிட்டாதவள்
மனிதன் ஆனந்திக்கும் சுகம்
நொடிப் பொழுதும் நில்லாமல்
பயணிப்பேன்....

பாற் கடலையும் கடந்திடுவேன்
கடலுடன் உறவாடிக் கவிழ்த்து
கலங்காமல் கரை தொடும்
பேரலை நான்...

இழிவாய் பேசும் மனிதா
அழுத்தி நினைவில் பதி,
சுவாசத்தால் சுகம் கூடும்
வாழ்வு செழித்திடும்...

இயற்கையை புறம் தள்ளி
இயந்திரத்தை நாடும் ஆறறிவு
இயந்திரம், மனதில் மருகும்
இழந்ததை அறிந்து இறுதியில்....

எந்தன் உடன்பிறப்பை வீழ்த்திப்பின்
உறுத்து விழித்து முறைத்தாலும்
துள்ளலுடன் தென்றல் - நான்
தோன்றுதல் இயலாது...

தவற்றைத் திருத்தி தவறாமல்
நட்டு வளர்த்திட நானும்
தோதாக தினம் தினம்
தவறாமல் வீசிடுவேன்....

அல்லாது,

வெட்டி வீழ்த்தி மாளிகைகள்
எழுப்பிட, அணல் அனைக்கும்
அன்புடன் ஆயினும் அனைக்காது
தென்றல் உன்னை...

அழுது புரண்டினும் குன்றும்
ஆரோக்கியம், ஆயுள் தேய்ந்து
அழிந்திடும் உந்தன் சுவர்
சித்திரம் வரைவதெப்படி..?

சிந்தித்து செழிப்பாக வளர்த்திடு
வானுயர் மரங்களை - உங்கள்
சுவாசத்தில் நிலைத் திருப்பேன்
தென்றலாய் வந்து...

இப்படிக்குத் தென்றல்....!!!

எழுதியவர் : கவிபாரதீ (24-Apr-23, 3:15 pm)
Tanglish : ipadikku thendral
பார்வை : 168

சிறந்த கவிதைகள்

மேலே