வானம் ஒரு காமதேனு

#வானம் ஒரு காமதேனு

ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு நேரமும்
ஏதேனும் ஓர் வண்ணம் பூசிக் கொள்ளும் வானத்திற்கு
யார் தருகிறார்கள்
விதவிதமாய் வண்ணங்களை..?

நிர்மூலமாய் இருக்கும்
பகல் வானத்திற்கு
நீல வண்ணம்
நிரந்தரமாய் இருப்பதில்லை
மழைக்காலங்களில்..!

வான்முகத்திற்கு சாம்பலை அள்ளிப் பூசி
அழவைக்கிறது
கார்காலம்..!

சூரியன் பள்ளியெழும் போதோ அல்லது
படுத்துறங்கச் செல்லும் நேரங்களிலோ
சந்தனத்தைப் பூசிக் கொள்ளும் வானத்திற்கு
ஏதாவது வாசமிருக்கலாம்..!

தூரிகையின்றி
மேகங்கள் வரையும்
ஓவியங்களை
ஓட விரட்டி
அழித்து விடுகிறது
காற்று..!

இருட்டுக்குப் பயந்து
ஒளிந்து கொள்ளும்
சூரியனைக் கண்டு
கண் சிமிட்டி நகைக்கின்றன
நட்சத்திரக் கூட்டங்கள்
தாம் பகலுக்கும்
மழைக்கும் பயந்தவர்கள்
என்பதை
உணராமலேயே..!

வானம் இப்படித்தான்..
பார்க்கப் பார்க்க…
இரசிக்க.. இரசிக்க
கவிதை தரும்
காமதேனு .!

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (31-Jul-25, 9:16 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 14

மேலே