பிரிவுக்குத் 💔 துணிவில்லை

சில நேரங்களில்
சிரிக்கிறாய்...
பல நேரங்களில்
முறைக்கிறாய்...
ஆனால்,
என் மனதில்
எப்போதும்
நேசம் மட்டும் தான்.

அன்பின் கனவாய்
நான் தொடர்ந்தேன்,
அழகின் கனவாய்
நீ வந்தாய்...
அமைதியான பார்வையில்
அடிமனதைத் திறந்தாய்...

மலரும் தருணத்தில்
முகம் தர மறுக்கிறாய்,
காதலின் உண்மையை
மௌனத்தில் மறைக்கிறாய்...

நாம் பேசும் மொழி மாறி,
நான் தவிக்கும் நாட்கள் நீள,
நீ ஒரு கொடிய
பார்வை பார்த்து,
நான் அதைப்பார்த்து,
மனதுக்குள் மலைத்து நிற்கிறேன்...

தூரத்தில் நின்றாலும்
உன் நிழலை
நான் தொட்டுப் வைக்கிறேன்,
சென்ற பாதையில்
ஒரு நினைவை
நீ விட்டு வைக்கிறாய்..

நாளைக்கு வருவாயா,
நான் மட்டும் வருவேனா,
தெரியாது,
எப்போது பேசுவாயோ,
எதையும் சொல்வாயோ..
மனதில் என்னை
ஏற்றுக்கொள்.
உன் மௌனத்தையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்...

என் கவிதை நீ,
என் கனவு நீ,
இவ்வுலகம் இடிந்த காலத்திலும்,
வாழும் காதல் நீ...

தெரிந்துகொள்
தேவதையே,
புரிந்து கொள்
புன்னகையே,
ரசித்துக் கொள்
ராட்சஷியே...
அறிந்து கொள்
அழகு காதலையே...

என்னுடன் பிரிவுதான்
உனக்கு மகிழ்ச்சி...
ஆனாலும்,
உன் மகிழ்வே,
எனக்கு மகிழ்வு
அல்லது துக்கம்.

என்ன செய்துவிடும்
என் பிரிவு, என்கிறாய்.
எதுவுமே செய்யாமல்
வைத்துவிடும்...
காதலுக்கு
கண் இல்லை,
பிரிவுக்குத்
துணவு இல்லை,

ஒருவேளை
நீ பிரிந்தாலும்,

(அந்த)
பிரிவு
வரும்...
போகும்...
ஆனால்,
என் காதல்
எப்போதும்
என்னுடன்தான்
இருக்கும்.

✍️கவிதைக்காரன்


https://youtu.be/eADdfhakn1Q

இந்த கவிதையை என் குரலில் கேட்க அந்த லிங்க் பயன்படுத்துங்கள். நேரடியாக கிளிக் செய்ய முடியாது,
காப்பி செய்து ப்ரௌசரில் ஓபன் செய்யவும்.

நன்றி
நன்றி
நன்றி.



.




.


.

எழுதியவர் : கவிதைக்காரன் (5-Aug-25, 1:22 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
பார்வை : 36

மேலே