கவிதைக்காரன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கவிதைக்காரன்
இடம்:  namakkal
பிறந்த தேதி :  07-Mar-1980
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Jan-2020
பார்த்தவர்கள்:  638
புள்ளி:  202

என்னைப் பற்றி...

சொல்வதற்கு பெரிதாக ஒன்றும் சாதிக்கவில்லை.
என் பெயர் தினேஷ்
தொடர்புக்கு
6382052366

என் படைப்புகள்
கவிதைக்காரன் செய்திகள்
கவிதைக்காரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Feb-2023 3:38 pm

ஆணும் பெண்ணும்
************************

தனது
திருமணத்திற்குப் பின்,
"ஆணும் பெண்ணும் சமம்",
என் பெண்ணியம்
பேசும் பெண்,
ஏனோ
அந்த சமத்துவத்தை,
தனது மகனின்
திருமணத்திற்குப் பின்
(வசதியாக)
மறந்து விடுகிறாள்......!
😀😃😄😁😁


என்ன கெரகமோ,

தனது
திருமணத்திற்குப் பின்,
தான் ஒரு ஆண்
என
கர்வம் கொள்ளும் ஆண்மகன்,
தனது மகளின்
திருமணத்திற்குப் பின்,
அதை
(வசதியாக)
மறந்து விடுகிறான்.😁🤣😂😅





✍️கவிதைக்காரன்.

மேலும்

கவிதைக்காரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Nov-2021 2:29 pm

********************

சமூகத்தில்,
பெண் என்பதால்
சலுகை வேண்டுமெனில்,
சம உரிமை கேட்காதே...

ஆண்களுடன்
சம உரிமை
வேண்டுமெனில்,
பெண் என்பதற்கான
சலுகை கேட்காதே...

உரிமையும் வேண்டும்
சலுகையும் வேண்டும்
எனில்,
ஆண்கள்தான்
சம உரிமைக்காக
போராட வேண்டும்...

பெண்ணே...
உரிமையோ,
சலுகையோ...
எதையும்
எடுத்துக் கொள்...

ஆனால்,
ஆண்களையும் வாழ விடு...


#உலக_ஆண்கள்_தின_வாழ்த்துக்கள்.


✍️கவிதைக்காரன்.

மேலும்

கவிதைக்காரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Nov-2021 11:46 am

*********************************

"இனிமே
உங்கூட ஒரு நிமிஷம் கூட
வாழ முடியாது...
உன் முகத்தைப் பார்க்கவே
விரும்பவில்லை..
கெட் லாஸ்ட்...",
என்று பிரிந்து போனாள்
என் முதல் மனைவி.

'எனக்கு
எல்லாமே நீதான்',
என்று சொன்னவர்கள்,
யாரோவாகிப் போவது
சிலரின் வாழ்வில்
தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

ஒரு
சுபயோக சுபதினத்தில்,
எங்களது விவாகரத்து
நீதிமன்றத்தில்
உறுதியானது.

அத்தனை
எளிதானதில்லை,
நிரந்தர பிரிவுக்குப் பின்,
தனிமை.

பதினோரு மாத
பாலைவன தனிமைக்குப்பின்,
மீண்டும்
ஒரு தேவதை
என் வாழ்க்கை பாதையில்
குறுக்கிட்டாள்.

எனக்கு
இரண்டாவது கல்யாணம்
என்பதால்,
அவள் வீட்டில்

மேலும்

கவிதைக்காரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Nov-2021 5:27 pm

***************************

என் நண்பன் சொன்னான்,
"நண்பா..
காதலுக்காக
உயிரையும் கொடுக்கலாம்..‌"

எனக்கு மிகப்பயங்கரமான கோபம்,
'ங்கொய்யால...
உன் காதலுக்காக
நீ உயிரைக் கொடுப்பது நியாயம்.
என் உயிரை எடுப்பது
எந்த விதத்தில் நியாயம்...?.'

இந்த
இரண்டாவது பாரா போலவே,
என் வாழ்விலும்
இரண்டு போட்டிகள்....
போட்டியில்,
எது ஜெயித்தாலும்,
பாதிப்பு எனக்கு மட்டுமே..‌

முதல் போட்டி:
கொரோணாவுக்கும்,
என் மனைவியின் சமையலுக்கும்...
யார் முதலில் என்னை
சாகடிப்பதென்று.

இரண்டாவது போட்டி:
என் கையெழுத்துக்கும்
என் தலையெழுத்துக்கும்.
எது மோசமாக இருப்பதென்று...

இரண்டு போட்டிகளிலும்

மேலும்

கவிதைக்காரன் - கவிதைக்காரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Sep-2021 8:36 pm

செக்மேட்
**********

வெகு நாட்களாக
எனக்குத் தெரியாது,

நம் ராஜா,
தப்பிக்க வழியின்றி
எதிரிகளிடம்
சரணடையும் நிலைதான்
செக்மேட் (checkmate)
என்பது...

நான் கல்லூரி பேராசிரியர்,
எனவே,

என்தோழி,
என்னை
புரஃபெசர்
என்றழைப்பாள்,
செல்லமாக
அல்லது
நக்கலாக...

அன்று
எங்களுக்குள்
சண்டை...
(அன்று மட்டும் தானா..)

இவளுக்கு செக் வைக்கனும்
என்று
நினைத்துக் கொண்டேன்.

ஈகோதான்,
இருந்தாலும்
இப்படி சொன்னேன்,

"இனிமே
நீயே கால் பண்றவரைக்கும்
நான் உன்கிட்ட பேசமாட்டேன்..."

"புரஃபெசர்...
என்கிட்ட
சவால் விடாதீங்க..
தோத்துருவீங்க..."
என்று சொன்னாள்
அல்லது
மிரட்டினாள்.

எத்

மேலும்

செந்தமிழில் இதை சொல்ல நான் தயார். ஆனால், ஆர்கலி என்றால் யார்...? அவள் உங்கள் காதலியா?. என்று கேட்பவர்களுக்கு, நான் எப்படி எழுதுவது சகோதரரே....??? 30-Sep-2021 4:04 pm
அழகான கவிதை போர் சூழல் அதைத் தாங்கள் விவரித்திருக்கும் பாகையும் நன்றாக இருக்கிறது இருந்தாலும் செந்தமிழ் கவிதையை ஏற்றினால் இன்னும் மகிழ்ந்திருப்பேன் 29-Sep-2021 11:26 pm
கவிதைக்காரன் - கவிதைக்காரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Sep-2021 5:05 pm

அன்பு செய்யுங்கள்...
*****


சில சமயங்களில்
தவறு செய்வோம்...
பல சமயங்களில்
அப்படி நினைத்துக் கொள்ளப்படுவோம்...

இரண்டு நாட்களுக்கு முன்பு
எங்கள் நண்பர்களுக்குள்
சிறிய அல்லது பெரிய சண்டை.

நான் உண்மையில்
தவறு செய்தேனா...
இல்லை,
அப்படி நினைத்துக் கொள்ளப்பட்டேனா...
தெரியவில்லை.

எனக்கு
ஒன்று மட்டும் தெரிந்தது...

சண்டைகள்
என்பவை
எதிர்கால இழப்புகள்...‌

இந்த சண்டையிலும்
எனக்கு தெரிந்தது,
நான் இழக்கப் போகிறேன்
அல்லது
நீ இழக்கப் போகிறாய்...

அதிர்ஷ்டவசமாக
அல்லது
துரதிர்ஷ்டவசமாக
அப்படியெல்லாம்
எதுவும் நடக்கவில்லை...

வருத்தம் தெரிவித்தது
ஒர் உயிர், மறுநாள்..

மேலும்

நன்றி சிவபார்வதி... தென்னாட்டுடைய சிவனே போற்றி 21-Sep-2021 12:59 am
அருமையாக சொன்னீர்கள் நண்பா 20-Sep-2021 11:00 pm
கவிதைக்காரன் - கவிதைக்காரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Sep-2021 4:21 am

மருந்துக்கும்
உண்மைக்கும்
ஒரே சுவைதான்...
அது கசப்பு...

நாம்
நினைத்துக் கொள்வதே
உண்மை
என்பது
மனித மனம்.

பார்கவி
நினைத்துக் கொண்டாள்,
அவளை எனக்கு
பிடிக்காதென.

அது தான்
உண்மை
என நம்பினாள்.

பேசவில்லை
என்னிடம்
ஏராள நாட்கள்...

திடீரென
ஒரு நாள்
இனிமே உன்கிட்ட
எப்பவுமே
பேசமாட்டேன், போ...
என்றாள்.

எத்தனையோ
சமாதானம்
சொன்னேன்...

அவள் கேட்கவில்லை.

பேச மாட்டேன்
என்பதை
பேசினாள்..
பேசினாள்...
பேசினாள்...

வெகு திடீரென
அவள்
முகம் நிமிர்த்தி,
சொன்னேன்

ஐ லவ் யூ..

அவள்
கோபப்படவும் இல்லை.
வெட்கப்படவும் இல்லை.

இத சொல்றதுக்கு
இவ்வளோ நாளா...?
என்

மேலும்

நன்றி சண்டியூராரே... 17-Sep-2021 1:41 pm
உங்கள் கவிதை படிப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. ஆரம்பமே..." மருந்துக்கும் உண்மைக்கும் ஒரே சுவைதான் "என்ற வரிகள் அற்புதம். 17-Sep-2021 8:02 am
கவிதைக்காரன் - கவிதைக்காரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Sep-2021 11:03 pm

நாள்
முழுக்க
உன்னோடு
பேசிக்கொண்டே
இருந்தாலும்
"நாளைக்கு
பாக்கலாம், பை..."
என்று சொல்லிப் பிரிந்த
மறு வினாடியே,
நீயோ அல்லது நானோ
அலை பேசியில்
அழைத்து விடுகிறோம்...

பின்பு
எவ்வளவுதான்
பேசினாலும்
நம் பேச்சுகள்
ஓய்வதே இல்லை...

ஒரு வேளை
இது தான் காதலோ.....






✍️கவிதைக்காரன்

மேலும்

நண்பரே.., அம்மாதிரி அடர்வு அதிகம் கொண்ட அதி சொற்களை பயன்படுத்த நான் தயார்.... ஆனால் ஆர்கலி என்றால் என்ன என்று சண்டைக்கு வருகிறார்கள் சிலர்.... எனவே எளிய எழுத்துருக்கள்.... நன்றி தோழரே... 16-Sep-2021 1:37 am
அடடே. தங்களின் பதிவு மிகவும் நன்றாக இருக்கிறது இருந்தபோதிலும் வரிகளின் அடர்த்தி சற்று குறைவாக இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது எனவே சற்று ஆழமான வரிகளையும் மழை கொட்டிய சொந்தங்களையும் சேர்த்து எழுதுங்கள் உங்கள் பதிவு மிகவும் சிறப்பானதாக இருக்கும் 15-Sep-2021 11:55 pm
கவிதைக்காரன் - கவிதைக்காரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Jan-2020 10:59 am

சே...
இந்த காதல்
கொண்டவனையே
கொல்லும்
சாபம.


-கவிதைக்காரன்

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே