செக்மேட்

செக்மேட்
**********

வெகு நாட்களாக
எனக்குத் தெரியாது,

நம் ராஜா,
தப்பிக்க வழியின்றி
எதிரிகளிடம்
சரணடையும் நிலைதான்
செக்மேட் (checkmate)
என்பது...

நான் கல்லூரி பேராசிரியர்,
எனவே,

என்தோழி,
என்னை
புரஃபெசர்
என்றழைப்பாள்,
செல்லமாக
அல்லது
நக்கலாக...

அன்று
எங்களுக்குள்
சண்டை...
(அன்று மட்டும் தானா..)

இவளுக்கு செக் வைக்கனும்
என்று
நினைத்துக் கொண்டேன்.

ஈகோதான்,
இருந்தாலும்
இப்படி சொன்னேன்,

"இனிமே
நீயே கால் பண்றவரைக்கும்
நான் உன்கிட்ட பேசமாட்டேன்..."

"புரஃபெசர்...
என்கிட்ட
சவால் விடாதீங்க..
தோத்துருவீங்க..."
என்று சொன்னாள்
அல்லது
மிரட்டினாள்.

எத்தனை பேரை
கலாய்த்திருக்கிறோம்...
இவள், பெரிய இது...
என்று
நினைத்து கொண்டேன்.

அன்றிரவு
ஒரு செய்தி அனுப்பினாள்.
"புரஃபெசர்...
உங்களுக்கு ஈகோ வந்துருச்சு.
நீங்க தான் பெரிய ஆள் என்று
நினைக்குறீங்க...
உங்க அன்பு பெருசா..
என் அன்பு பெருசா...
என்று ஈகோ பாக்குறீங்க.
ஆனால்
பரவாயில்லை..
நான் கால் பண்ண மாட்டேன்.
உங்க கூட
இருந்த நாட்களில்
நான் சந்தோஷமா இருந்தேன்
அதுக்கு நன்றி..."

என்று
சொல்லியிருந்தாள்..
அல்லது
பயமுறுத்தியிருந்தாள்..

இப்போது
நான் கால் செய்தே தீரவேண்டும்
அல்லது
நட்பை இழக்க வேண்டும்.

நான் தான்
எல்லோருக்கும்
ச்செக் வைப்பேன்.
ஆனால் இவள்...?.

அலைபேசியில்
அழைத்தேன்,
முதல் ஒலியிலேயே
செல்பேசியை எடுத்தவள்,

"செக் அன்ட் மேட்
புரஃபெசர்..

நீதான் எல்லோருக்கும்
செக் வைப்பியா...?.

இதுதான் புரஃபெசர்
செக்மேட்..
இனிமே
உனக்கு நான்
மரியாதை தரப்போவதில்லை.
என்ன வேணாலும்
பண்ணிக்க.
போடா..."
என்றாள்.

ஹும்ம்ம்...
செக் வச்சி..
என் மரியாதை
போனது தான் மிச்சம்.

பாருங்க,
இப்பகூட கூப்பிடுறா...
எங்கள் நட்பு
முறிந்து போகவில்லை,
அதிர்ஷ்டவசமாக
அல்லது
துரதிர்ஷ்டவசமாக....

✍️கவிதைக்காரன்

எழுதியவர் : கவிதைக்காரன் (29-Sep-21, 8:36 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
பார்வை : 90

மேலே