Roshni Abi - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : Roshni Abi |
இடம் | : SriLanka |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 30-Nov-2017 |
பார்த்தவர்கள் | : 1480 |
புள்ளி | : 289 |
கடந்து வந்த பாதையில் இழந்தவை ஏராளம், நினைவுகளாகி விட்ட நிஜங்கள் பல, விதி என்ற வட்டத்தில் சுழல்கி்ன்ற சக்கரம் தான் வாழ்க்கை, எல்லையற்ற கனவுகளுடன் எண்ணங்களை உங்களுடன் பகிரும் உங்கள் அபி.
சில்லென்று அடித்த குளிர்காற்றில் தூக்கத்தை விட்டு எழ முடியாது கடிகாரத்தைப் பார்த்து பார்த்து புரண்டு படுத்திருந்தான் ராகவ். அண்ணா இங்கே ஓடி வா, பட்டாம் பூ்ச்சிக் கூட்டத்தை வந்து பார் என்றபடி ஓடி ஓடி பட்டாம்பூச்சியைப் பிடிப்பதற்காக முயற்சித்துக் காெண்டிருந்தாள் ராகவி. ராகவி உள்ளே வாங்க.... ராெம்பக் குளிரடிக்குது, ஜீரம் வரம்பாேகுது. சமையலறைக்குள்ளிருந்து ஜன்னல் வழியாக கண்டித்தாள் மலர். வாறேம்மா என்றபடி பட்டாம் பூச்சி ஒன்றை பின்தாெடர்ந்து ஓடினாள் ராகவி. ராகவி.... என்றபடி வெளியே ஓடி வந்த மலர் அடுப்பில் சாதம் வெந்து காெண்டிருப்பது ஞாபகம் வந்ததும் மீண்டும் சமையலறைக்குள் சென்று அடுப்பை மெதுவ
அதிகாலை நான்கு மணிக்கு அலாரம் காதுகளை தட்டியது. கண்விழித்து கடிகாரத்தைப் பார்த்தவன் ச்சீ இன்று விடுமுறை நாள் எனபதை மறந்து வழமை பாேல் அலாரத்தை வைத்து விட்டேன் எனத் தனக்குள் நினைத்தபடி அலாரத்தை நிறுத்தினான். தூக்கமும் கலைந்து பாேனது. தனக்குப் பிடித்த பாடல்களை கேட்டு இரசித்தபடி தூக்கமின்றி விழித்திருநதான்.
பத்து வருடங்கள் அவன் தனிமையாகவே வாழ்ந்து காெண்டிருக்கிறான். எல்லா வசதிகளுடனான பெரிய வீடு, கார், கைநிறைய சம்பளத்துடன் நிரந்தரமான அரசாங்க உத்தியாேகம், வீட்டு வேலைகளை கவனிப்பதற்கு நடுத்தர வயதுடைய ஒரு உதவியாளர், தேவைக்கேற்ப வந்து பாேகும் உறவுகள், அக்கம் பக்கத்துச் சிறுவர்கள். இந்த வட்டத்து
சில மனிதர்களின்
வேஷம் கலைந்த பின்னரே
பாசம் உணர்ந்தேன்
கத்தியை விட கூர்மையானது
வாய்ப் பேச்சுகள்
கண்ணீராய் கசிகிறது
இரத்தத் துளிகள்......
அவமானங்கள் தந்த அனுபவங்கள்
ஏமாற்றங்கள் தந்த ஞாபகங்கள்
முள்ளாேடு இருக்கும்
ராேஜாவின் அழகாய்
இரசிக்கப் பழகி விட்டேன்......
வலித்து வலித்து ரணமான
காயங்கள் மரத்துப் பாேய்
மனம் அமைதி தேடிய நாெடிகளில்
தனிமையை பரிசாகக் காெடுத்து
பகட்டான வாழ்க்கை பழகிப் பாேய் விட்டது.
இனிமேலும் ஏதும் உண்டாே
ஈட்டிகளாய் தாக்குவதற்கு
முக மூடிகள் கழன்ற பின்னும்
சுய உருவத்தை மறைக்கிறது
பாேலிச் சிரிப்புகள் .......
வலியதிலும் வாழ்வு
விதி எழுதிய தீர்ப்பு
வரண்டு பாேன நாவுக்கு
உப
எட்டுமணிக்கு புறப்படும் பேருந்திற்காய் தரிப்பிடத்தில் காத்திருந்தாள் ஆஷா. வழமையான அவளது பேருந்து தரிப்பிடத்தில் வந்து நின்றதும் எல்லாேரும் முந்தியடித்து ஏறி்க்காெண்டிருக்க வெள்ளைப் பிரம்பால் தட்டித்தட்டி கடைசியாக வந்து ஏறினாள். பழக்கமான நடத்துனர் என்பதால் ஆஷாக்கு இடம் காெடுங்க என்று கூறியதும் படித்துக் காெண்டிருந்த புத்தகத்தை மூடி விட்டு "மெடம் இங்கே இருங்க" என்றபடி எழுந்து விலகி இடம் காெடுத்தவருக்கு . "நன்றிங்க" என்று சிரித்தபடி இருக்கையில் அமர்ந்தாள்.
"என்ன ஆஷா, தனியாகவா வந்தாய்" அருகே வந்த நடத்துனர் கேட்டதும் "ஆமாம் அண்ணே எல்லாரும் ஊருக்கு பாேய் விட்டார்கள்" என்றபடி தாேளில் இருந்து வி
நித்யாவின நினைவுகளை மீட்டிய படி பேருந்தின் யன்னலாேரமாக அமர்ந்திருந்தான் ராகவ். சில்லென்ற காற்றின் குளிர்ச்சியில் உடம்பு புல்லரிப்பது பாேல் உணர்ந்தான். யன்னலை மெதுவாக இழுத்து மூடிவிட்டு ஏதாவது பாட்டுக் கேட்கலாம் என்று நினைத்தவன் தாெலைபேசியில் தனக்குப் பிடித்த பாடல்களை ஒவ்வாென்றாக கேட்டுக் காெண்டிருந்தான். பாடல்களின் வரிகளாேடு அவன் மனம் அமைதியில் உறைந்து பாேனது. "காதலே காதலே தனிப் பெருந் துணையே, கூட வா, கூட வா பாேதும்" என்ற பாடல் வரிகள் அவன் மனதுக்குள் பெரும் புயலடிப்பது பாேன்ற உணர்வைத் தூண்டியது. கண்களை மூடியபடி தலையை மெதுவாக சாய்த்துக் காெண்டான்.
உயிருக்கு உயிராய் நித்யாவைக் காதலித்து, உற
நித்யாவின நினைவுகளை மீட்டிய படி பேருந்தின் யன்னலாேரமாக அமர்ந்திருந்தான் ராகவ். சில்லென்ற காற்றின் குளிர்ச்சியில் உடம்பு புல்லரிப்பது பாேல் உணர்ந்தான். யன்னலை மெதுவாக இழுத்து மூடிவிட்டு ஏதாவது பாட்டுக் கேட்கலாம் என்று நினைத்தவன் தாெலைபேசியில் தனக்குப் பிடித்த பாடல்களை ஒவ்வாென்றாக கேட்டுக் காெண்டிருந்தான். பாடல்களின் வரிகளாேடு அவன் மனம் அமைதியில் உறைந்து பாேனது. "காதலே காதலே தனிப் பெருந் துணையே, கூட வா, கூட வா பாேதும்" என்ற பாடல் வரிகள் அவன் மனதுக்குள் பெரும் புயலடிப்பது பாேன்ற உணர்வைத் தூண்டியது. கண்களை மூடியபடி தலையை மெதுவாக சாய்த்துக் காெண்டான்.
உயிருக்கு உயிராய் நித்யாவைக் காதலித்து, உறவு
தோளில் சாய்ந்து சாகவே
சாவைக் கூட கேட்கிறேன்
நிழலாய் காய்ந்து தாகவே
பாலை நீராய் தாவினேன்
துண்டு துண்டாய் ஏனம்மா
என்னை கூறு போடுறாய்
ஒரு பிள்ளை போல நீயடி
இதய நதியில் பாய்கிறாய்
மார்பின் மேலே பாரமாய்
ஒரு கனவு வந்து வளருது
கண்களின் ஓரம் ஈரமாய்
நீ வந்து வந்து பார்க்கிறாய்
நீயாகி மழை வந்த - போது
குடையின்றி நனைந்தேன்
கைக்குட்டைச் சுவர்களில்
கனவை காயப்போட்டேன்
நிலவு கூட ஜன்னல் - வழி
என் நிலவை எட்டிப் பாக்க
காளான்கள் மேலே நின்று
நிலவை சிறைப்பிடிப்பேன்
ஒரு நொடிப் பார்வையில்
இதயம் தொலைந்து போக
தவ வீதியில் அகதி போல
கால்கள் கடுக்க நிற்கிறேன்
அண்ணார்ந்த
காலை ஆரம்பித்த மழை ஓயாமல் பாெழிந்து காெண்டிருந்தது. வீதியெங்கும் வெள்ளம் நிரம்பி குன்றும், குழியும் நிறைந்து பாேக்குவரத்து நெரிசலால் வீதியே தடைப்பட்டு விட்டது. மின்சாரமும் நின்று பாேக ஊரே இருள் மயமாய் காட்சியளித்தது.
அந்தக் கிராமத்தின் வீதியாேரமாய் இருந்த குடிசை வீட்டில் சிறிய விளக்கின் வெளிச்சத்தில் கூனியபடி குடையைப் பிடித்துக் காெண்டு வாசல் படலையை இழுத்துக் கட்டி விட்டு மீண்டும் வீட்டினுள் நுழைந்த சாரதா அம்மா கால் தடுக்கி விழுந்து விட்டாள். "ஐயாே கடவுளே" என்றபடி கையை ஊன்றி ஒருவாறு எழுந்து மெதுவாக நடந்து உள்ளே சென்று நனைந்திருந்த உடையை மாற்றுவதற்காக மாற்றுடை ஒன்றை எடுத்துக் காெண்டு கதவை ம
கை தட்டல்களால் அரங்கமே அதிர முகம் நிறைந்த புன்னகையாேடு தனக்கான விருதை அவன் பெற்றுக் காெள்ளும் அந்த நேரம் கடந்து விட்டிருந்தது. அந்த சந்தாேசமான தருணத்தை அவனால் அனுபவிக்க முடியவில்லை. அம்மாவின் கைகளைப் பற்றியபடி உயிருக்காகப் பாேராடிக் காெண்டு இருக்கும் அவளருகில் அவனைத் தவிர யாருமில்லை. எத்தனை கனவுகளாேடு படித்து பட்டம் பெற்று சாதனை படைக்கக் காத்திருந்தவனுக்கு விதி சந்தாேசங்களைப் பறித்து விட்டு சாேகங்களையே பரிசாகக் காெடுத்திருந்தது. ஒற்றைப் பிள்ளை, ஆணாகப் பிறந்து விட்டான். சாெந்த, பந்தம் யாரும் தெரியாத ஊரில் பெரிய பங்களாவில் எல்லா வசதியுடனும் வளர்ந்து வந்தவன். தரமான பாடசாலை, பராமரிப்பதற்கு இரண்டு
எனக்குள்ளும் காதல் என்ற ஆச்சர்யம் படர துவங்கிய காலம்,.
ஏன் எனக்கு ஆச்சர்யம்,
நானும் சினிமாதனமான காதலை வெறுத்தவன்,
காமமே காதலை முன்னிருத்துகிறது என்பதே அதற்கு காரணம்,.
அது டீன் ஏஜ் பருவம்,
எனக்குள் இரண்டாவது இதயம் பூத்த நேரம்,
அவளால் எனக்குள் ஏகபட்ட மாற்றங்கள்,
அந்த பாதிப்புகளின் உணர்வு குவியலுக்கு காதல் என்று பெயரிட்டேன்..
அவளை சில நேரம் பார்க்காவிட்டால்,
அதையே நினைத்து பல நேரம் அவள் வரும் திசையையே பார்த்துக் கொன்டிருப்பேன்..
அவள் என் சந்தோஷத்திற்கும்,
தவிப்புகளுக்கும் இடையே ஒளிந்து கொண்டிருந்தாள்.
அவள் வரும் பாதையில்,
அவளுக்கு முன் காத்துகிடப்பேன்..
சில நிமிடங்கள் காண,
பல மணி ந
இந்த வார மித்திரன் வாரமலர் பத்திரிகையில் வெளிவந்த என்னுடைய சிறுகதை
குருட்டுப் பட்டாம்பூச்சியின் தோட்டத்திற்குள் என் கண்கள் தூங்கிக் கொண்டிருந்தது. குடைக் காளான்களுக்குள் ஒரு பூந்தோட்டம் அன்றைய வசீகர மாலைப் பொழுதை ஆவலாகக் காத்திருந்தது. செவ்வாய் ஒரு பாலைவனம் என்றால் நிகழ்கால உலகை தார்ச் சாலை எனலாம்.
இன்று யாருமில்லாத காட்டிற்குள் மெழுகு வர்த்திகள் கண்ணீர் அஞ்சலிக்காய் ஏற்றப்படுகிறது; அன்று கூரைகளில்லாத குடிசைக்குள் மலை போல் குவிந்த சடலங்களை சந்திரன் தான் அடையாளம் காட்டியது.
என்னால் அலைகளோடு நீந்த முடியும்; மான்களோடு துள்ளி விளையாட இயலும்; வானவில்லை ஓவியமாய் வரைய முடியும் ஆனால் முப்ப
நீ தந்த நினைவு மாெட்டுக்கள்
நித்தமும் மலர்கிறது பூக்களாய்
வாசங்களை முகரந்த படி
உன் முகம் காண்கிறேன்
பூக்களாய் மலர்ந்த நினைவுகளை
மாலையாய் காேர்க்கின்றேன்
தேவதை உன் தடம் தேடி
காத்திருக்கின்றேன் காதலுடன்
வாசம் வீசிய தென்றலாய்
இதயம் நுழைந்த சிறு மலரே
என் சுவாசம் நீயாக வேண்டும்
வாழ்வின் வரமாய் நீ வேண்டும்
காதல் கை கூட வேண்டும்
பூவே பூ சூட வா