தாரா கவிவர்தன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : தாரா கவிவர்தன் |
இடம் | : சேலம் |
பிறந்த தேதி | : 25-Nov-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 07-Sep-2017 |
பார்த்தவர்கள் | : 853 |
புள்ளி | : 276 |
செய்வதை சிறப்பாக செய்,தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர்..
வறுமை
அட்சய பாத்திரத்தில் உன்னை வைத்தானே
ஏழை வாழ்வினில் உன்னைப் பிணைத்தானே!
செறுகளம் புகுந்தாயே சரிநிகராய் நின்றாயே!
சிறுகுடில் புகுந்தாயே பெருமாளிகையென வாழ்கிறாயே!
கண்ணீரில் கரையும் இளமை
ஆசை பொற்குவியலில் தகித்திடும் கானல்!
இந்திரனுக்கு நீ பகையா
ஏழை ஆசைக்கு நீ தடையா!
வெஞ்சுடரில் தோலுரிந்த புழுவாய்
உயிர்பசிக்கு யாசிக்கும் முதுமை!
சிற்றெறும்பின் பசியாற மலையும் உணவானதே
உன் பசிக்கு ஏழைத் திறமைகள் இரையானதே!
புன்னகையற்ற பூந்தோட்டத்தில் ஓயாத
அலைகளாய் ஆர்பரிக்கிறாய்!
ஏழை வலிகளின் சுவடுகளில்
உன் கால்களைப் பதிக்கிறாய்!
இமைக்காமல்
எனை பார்த்திருப்பாயா....
உன் விழி மூடும்
ஒவ்வொரு கணமும்
என் சொர்க்கம்
இருளாகி போகிறது.....
இரு விழிகள்
உறக்கத்தை தேடி
இமை மூடினாலும்
இதயம் ஏனோ
உன் நினைவால்
விழித்துக் கொண்டே இருக்கிறது....
அழகு என்ற
வார்த்தையின் அர்த்தமெல்லாம்
உனை பார்த்து தான்
புரிந்தேனடி....
உன் அழகையெல்லாம்
வார்த்தைகளில்
விவரித்திடவும் முடியாதடி.......
நீ
பேசிவிட்ட
வார்த்தைகளை விட
நீ பேசாத
மௌனங்களில்
தானடா
வலிகள் அதிகம்..
என்
செவி இரண்டும்
கேட்குதடா
உன்
மௌனம்
களைந்து
பேசி விடு என்றே ..
வலிக்கும்
என தெரிந்தும்
மௌனத்தையே
பரிசளித்து
செல்வதும்
ஏனோ
வலியோடு
போராடும்
என் மனதிற்கு
உன்
வார்த்தைகளை
எப்பொழுது
பரிசளிக்க
போகிறாய் ..
வல்லமை படக்கவிதைப் போட்டியில் இது 149 கவிதைப்போட்டி, இதுவரை இதற்கு முன் யாரும் தாலாட்டுப் பாடியதாக என் நினைவில் இல்லை..எனவே கவிதைக் குழந்தைக்கு என் தாலாட்டு இதோ..
==================================================================================================
தாலாட்டு..!
==========
மங்கல வேளையில்நீ வந்து பிறந்தாய்
...........மாங்கல் யத்துக்குக் கிடைத்த பரிசாக
மங்காத செல்வத்தையும் கொடுப் பாய்
...........மண்ணை யாள வந்தாயோ தாலேலோ.!
மங்குலை யொத்த கருங் குழலொடும்
........... முகையவிழ் மலர் போல் சிரிப்பொடும்
செங்கனி வாய்ச் சிவந்த இதழொடும்
...........சிரிக்கு மென் செல்லமே கண
வேர்களின் முனையில்
தெரிகிறது
விதையின்
வீரியம்
ஹாக்கிங்ஸ் ஊணத்தில்
தெரிந்தது
உயிரின்
தைரியம்
ஜெயிப்பதற்கு உடல்
வேண்டாம்
உயிர்
போதும்
மரணத்தில் எழுதப்படுவதில்லை
நமக்கு
இன்றுமட்டும்
என்று
ஜனனத்தில் சொல்லப்படுவதில்லை
நமக்கு
மரணம்
முடிவென்று
சரித்திரத்தின் பக்கங்கள்
கனக்கிறது
நம்பிக்கை
அடிவைக்கும்போது
தற்கொலை செய்யும் கனவுகள்!
கவிஞர் இரா. இரவி
தற்கொலை செய்யும் கனவுகள் பலருக்கும்
தற்செயலாக வருவதுண்டு வியப்பாக இருக்கும்!
உள்ளத்து உணர்வுகளே கனவாக வரும்
ஒருபோதும் தற்கொலை எண்ணம் வேண்டாம்!
உலகில் விலைமதிப்பற்றது நம் உயிர்
ஒருவரும் உலகில் தற்கொலை செய்யாதிருக்க வேண்டும்!
கோடிப்பணம் கொட்டிக் கொடுத்தாலும் யாரும்
கூத்தாடினாலும் மாண்ட உயிர் திரும்பாது!
தற்கொலை எண்ணம் என்பது கோழைத்தனம்
தரணியில் வாழ்வாங்கு வாழ்ந்திடல் வேண்டும்!
தற்கொலை என்பது என்றும் தீர்வாகாது
தன்னம்பிக்கை இருந்தால் தரணியில் வாழலாம்!
துன்பத்திற்காக தற்கொலை செய்வது என்றால்
தரணியில் ஒ
பிறமொழி யாவும் தான்
இயங்கத் துணைத் தேட
தான் இயங்கத் துணை
தேடத் தனித்த மொழியாம்...!
நான் பிறழாமல் எந்தன்
வாழ்வும் பிறழாமல்
வாழிக் காட்டிட வழிநூல்
ஓராயிரம் தன்னகத்தே
கொண்ட மொழியாம்....!
வழிநூல் யாவும் உலக
வாழ்வுக்கு வித்திட
அதைப் பார்த்தோர் கண்ணோட்டம்
மாற்றியதால் அஃது
அரிவியலுக்கும் வித்திட
வைத்த மொழியாம்.....!
இவ்வுலகில் உயிர்த்த ஐந்தறிவு
முதல் ஆறு அறிவு
உயிர்கள் வரை உதிர்த்த
முதல் சொல்
எந்தன் மொழியாம்........!
யாம் கற்ற எம் தமிழ்
மொழியால் நெஞ்சுரம்
ஏறிய திமிரினில் எம்தமிழ்
மொழ