தாலாட்டு

வல்லமை படக்கவிதைப் போட்டியில் இது 149 கவிதைப்போட்டி, இதுவரை இதற்கு முன் யாரும் தாலாட்டுப் பாடியதாக என் நினைவில் இல்லை..எனவே கவிதைக் குழந்தைக்கு என் தாலாட்டு இதோ..

==================================================================================================

தாலாட்டு..!
==========


மங்கல வேளையில்நீ வந்து பிறந்தாய்
...........மாங்கல் யத்துக்குக் கிடைத்த பரிசாக
மங்காத செல்வத்தையும் கொடுப் பாய்
...........மண்ணை யாள வந்தாயோ தாலேலோ.!


மங்குலை யொத்த கருங் குழலொடும்
........... முகையவிழ் மலர் போல் சிரிப்பொடும்
செங்கனி வாய்ச் சிவந்த இதழொடும்
...........சிரிக்கு மென் செல்லமே கண்ணுறங்கு.!


ஐயமில் வளர்ந்து நாளைநீ வீட்டையும்
...........ஆளப் போகும் முத்தே முத்தாரமே
வையகமே மாதரால் சுகம் பெறுமாம்
...........பொய்யிலா நிலை யுறுவாய் தாலேலே.!


பாராய் எனை...உனைநான் புகழ்வேன்
...........பாங்குடன் உனைத் தாலாட் டுவேன்.!
ஆராயென் மனதை வளைய வருவாய்
..........ஆர் கண்ணும்படு முன்நீ கண்ணுறங்கு.!


விரும் பியே நானுனைப் பாடுவேன்
..........விரலால் தூளி யசைத்து அயர்ந்தேன்
துரும்பாவேன் நீயும் தூங்கவிலை யெனின்
..........சோதியே சுகமாய் நீ கண்ணுறங்கு.!


அம்மா வெனும் மழலைச் சொல்லால்
..........அனைத் தையும் நானுடன் மறப்பேன்
சும்மா நானினி இருப்பேனோ என்
..........சுகமானது சூரியன் போலுதய மாகும்.!

========================================

நன்றி:: கூகிள் இமேஜ்

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (18-Mar-18, 10:09 pm)
Tanglish : thaalaattu
பார்வை : 123

மேலே