அன்பான உலகம்
உருவத்தைக் கண்டு உள்ளத்தைக் கொன்று செல்கிறாயே!
உன்னில் கருணையென்பது கடுகளவும் இல்லையா?
இல்லை,
கருணையும் இல்லை,
தெளிவுற விளங்கிக்கொள்ளும் சிந்தனைச் சுடரும் இல்லை.
பித்தம் தலையில் ஏறி உன்னை ஆட்டிப் படைக்கிறது.
வெளித்தோற்ற மயக்கத்தில் மனம் குழம்பி சித்தம் கலங்கி நிற்கிறாயே நீ?
சற்றே உற்றுப் பார்.
நீ ஏங்குவது எதற்காக?
என்றாவது சிந்தித்தாயா?
எல்லாம் மாயை.
ஆசையால் பிணைந்த எதிர்ப்புகள் எல்லாம் மாயை.
பணப் பித்து பிடித்த மனமே!
இங்கு கடவுளின் தரிசனம் பணத்தால் கிடைக்கலாம்.
உண்மையான அன்பின் கரிசனம் என்று கிடைக்காது பணத்தாலே.
பெற்று வளர்த்த தாய், தந்தை பட்டியலிட்டே உன்னிடம் வளர்த்த கூலியை வட்டியும் முதலுமாய் கேட்டால் மகனே!
நீ அதைச் சம்பாதித்துக் கொடுக்க, உனது வாழ்நாட்கள் போதாது.
புத்தியிருந்தால் புரிந்து கொள்.
பணத்தை சம்பாதிக்காமல் அன்பான மனிதர்களைச் சம்பாதி..
உலகை அன்பான சோர்க்கமாக மாற்றிடு.
எதிர்கால சந்ததியினருக்குச் சேர்க்க வேண்டிய சொத்து.
தூய்மையான இயற்கையின் மடியில் எதிர்கால உலகம் தவழ அன்பைச் சம்பாதியுங்கள்.