இதுவல்ல
இதுவல்ல
வீட்டுக்கு வீடு
வரும் விருந்தாளி
வரவில் வைப்பது ….
போன பிறகு
வரும் தந்தி சொல்லும்
அடுத்த வரவு நல்வரவாகுக…!
இது
சரித்திரம் படைக்கும்
சர்வ சித்தி பெற்ற
பாவைகள் பலவார் வார்த்தெடுக்க !
கால் தவறா
கணவர்கள்
மீட்டெடுக்க தவம் செய்தல்
ஒரு வழியாக தேறும்
திண்ணையில் தாம்பூலம்
மனுதாக்கல் நலம் ஏற்க
அனுசரனை ஆனந்தமாய்
புதுப்பிக்க
அடுத்த வரவு கல கலக்க
கண்ணான கணவண்
கண்டெடுப்பார் புது வீணை
மறந்து போகும் அனுபல்லவி
மாற்று பட்டோடு மாறுவேடம்
கண் இமையால் மயிலாட்டம்
காணும் இனி அரங்கேற்றம்
இதுவல்ல வரவேற்பு !