அன்புடன் மித்திரன் - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : அன்புடன் மித்திரன் |
இடம் | : திருநெல்வேலி, தமிழ்நாடு |
பிறந்த தேதி | : 03-Mar-1996 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-Nov-2016 |
பார்த்தவர்கள் | : 40226 |
புள்ளி | : 1126 |
நற்சிந்தை மற்றும் நல்ல நடத்தையால் நானொரு மனிதன்.
அதைப் பற்றி எழுதுவதால் நானொரு எழுத்தாளன்...
Facebook page:- https://facebook.com/AnbuMiththiran
Twitter Id:-
https://twitter.com/AnbuMiththiran
எனது தொடர்கதைகளைப் படிக்க https://ta.pratilipi.com/user/6fc46vbn3g -க்கு செல்லவும்.
To Read my english poems, click here:- https://poemhunter.com/anbudan-miththiran
உலக நாடுகளை ஏமாற்றி அழிக்கும் நாடுகளின் கையில் அதிகாரம் வீட்டோ வடிவில்.
உலக நாடுகளை ஏமாற்றி ஆக்கிரமிக்கும் ஐக்கிய அமெரிக்க, ஐக்கிய இராச்சியத்தின் அதிகாரி நேட்டோ வடிவில்.
உருப்படுமா உலகம்? சரிப்படுமா இந்த கலகம்?
மக்களின் மீது அக்கறை இருப்பதாக தெரியவில்லை.
தனிப்பட்ட இருவரின் சண்டை, உடையுது பாரு மக்களோட மண்டை.
அகிம்சை என்பார், ஆயுதம் கோடி தயாரித்துக் குவிப்பார்.
எதற்காக? அமைதிக்காகவா? அமைதியை அழிக்கவா?
ஐக்கிய அமெரிக்கா செய்தால் தீவிரவாத ஒழிப்பு.
அதையே ரஷ்யா செய்தால் தீவிரவாத ஆக்கிரமிப்பு.
போதுமடா சாமி உங்கள் கொக்கரிப்பு.
இனியாவது தொடங்கட்டும் உக்ரைன், ரஷ்ய அமைதி ஒத்துழைப்ப
ஒருவர் கொள்ளையடித்தால் பிடித்து சிறையில் அடைக்கலாம். தண்டனை கொடுக்கலாம். ஆனால் ஒட்டுமொத்த மனிதர்களும் கொள்ளையர்களாக இருந்தால் என்ன செய்ய முடியும்?
டிஜிட்டல் பரிவர்த்தனை வந்த பிறகு எவ்வளவுக்கு எவ்வளவு பணம் பகிர்ந்துக்கொள்ள முடிக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு நம் பணம் திருடப்படவும் வாய்ப்புள்ளது. ஆன்லைன் வேலை தருவதாக சொல்லி 10 சதவீதம், 20 சதவீதம் கமிஷன் தருவதாக சொல்லி மிக எளிதாக ஆசை காட்டி உங்களிடம் உள்ள பணத்தை சுருட்டிக் கொண்டு உங்களையே வந்து பார் மல்லுக்கு என்றிடும் ஆன்லைன் மோசடிக் கும்பல்களை கண்டு கொள்ளாமல் அவர்கள் அடிக்கும் கொள்ளையில் பங்கு வாங்கிக்கொண்டு வேடிக்கை பார்க்கும் வங்கிகளை என்ன சொல
எங்கு நோக்கிலும் ஆண் பெண் பாலின கவர்ச்சி வயப்பட்டு புணர்ச்சிக்கு தயாராகும் ஜோடிகள்!
சுற்றி சுற்றி அதிலேயே வட்டமடிக்கும் கேடிகள்!
கேட்பதெல்லாம் இரட்டை அர்த்தமுள்ள ஆபாச வார்த்தைகள்!
விதைத்ததே வளரும் என்பார் போல் கேட்டதே வாயிலுதிக்க கூவிடும் சேவல், கோழிகள்!
இணையம் வரமுடியவில்லை.
வந்தாலே கண் முன்னே நிற்பதெல்லாம் கன்றாவியான காட்சிகளே!
கேட்டால் கணவன் மனைவி என்பார்கள்!
உன் மனைவியை நீ செய்வதை நாங்கள் ஏன்டா பார்க்க வேண்டும்?
மாவை அள்ளி முகத்தில் பூசிக்கொண்டு சினிமாவின் கலாச்சாரம் தான் பழக்கிக் கொண்டார்கள் இணையமெங்கும்.
சரி, நாமாவது பயனுள்ள வழியில் இணையத்தை பயன்படுத்தலாம் என்று பார்த
Desabakthiyum, Manithaneyamum / தேசபக்தியும், மனிதநேயமும்: சகோதரத்துவம் – முதல் தொடர் -இந்தப் புத்தகம் அமேசான் கிண்டில்்் கிடைக்கும்
" அவள் ரொம்ப தைரியபான பொண்ணு. ஏன் இப்படி பண்ணிக்கிட்டா? ", என்று ஊரெங்கும் ஒரே சலசலப்பு...
" யாரு அம்மா? என்ன பண்ணிக்கிட்டாங்க? ", என்று கேட்டான் வெளியூரில் இருந்து வந்த ஜான்...
" அவங்க எல்லாரும் மூன்றாவது தெருவில் நாலாம் நம்பர் வீட்டில் குடியிருந்த மாலாவைப் பற்றி பேசுறாங்க பா. " என்று ஜானின் தாய் மேரி பதிலளிக்கக் கேட்ட ஜான் கலக்கமடைந்தான்...
மேலும் அவனுடைய அம்மாகிட்ட, " அவ என்ன பண்ணிக்கிட்டா மா? ", என்றான்...
" இரண்டு நாளைக்கு முன்னாடி அவ அறையில தூக்குப் போட்டுக் கிட்டா பா. ", என்று அம்மா சொன்னதுமே ஜானின் முகத்தில் அப்படி ஒரு அதிர்ச்சி...
அதோட கண்ணீரும் வழிந்தோடியது...
இளமையில் ஜா
உயிரற்றுப் போனால் பிணமாவாய்
உணர்வற்று போயின் சடமாவாய்
மதி பிறழ்ந்தால் பைத்தியமாவாய்
மதி தெளிந்தால் வைத்தியனாவாய்
உன்னை அடக்கின் ஞானியாவாய்
உள்ளம் சிதைத்தால் மூடனாவாய்
உள்ளதை பகிர்ந்தால் வள்ளலாவாய்
உரிமைகளைக் கேட்டால் தலைவனாவாய்
கள்ள மனங்கொண்டால் திருடனாவாய்
காம எண்ணங்கொண்டால் நோயாளியாவாய்
உள்ளத்தில் சிறந்தால் நல்லவனாவாய்
உயிராக ஒழுக்கம் பேணால் உத்தமனாவாய்.
--- நன்னாடன்.
எதையோ நினைத்து எந்நாளும் உழன்று
பதை பதைப்பாய் பயணித்து பழிக்கு அஞ்சி
விதையிலேயே வெம்பி வீணாய் பயந்து
வேண்டியதை அடைய வெலவெலத்து நின்று
கண்டவர் கூறிய அறிவுரையை கேட்டு
கொண்டதை விட்டு கோட்டையை பிடிக்க எண்ணி
கொள்கை ஏதுமில்லாமல் கொஞ்ச நாள் அலைந்து
கொடூர நிலை வரை சென்று குற்ற மனதோடு திரும்பி
படிப்பில் பயணித்து பக்குவமாய் மாறி
படு சுட்டியாய் புத்திக் கூர்மைப் பெற்று
வெறுமையான என்னிடம் வெற்றிகள் வட்டமிட
விண்ணளவு புகழோடு வீர நடை போடுகிறேன் நான்.
--- நன்னாடன்.
பாதகத்தி! உன்னை நினைத்து பாறாங்கல்லா ஆச்சு நெஞ்சு.
பறவையதும் றெக்கை ஒடிஞ்சு விழுகுதடி எடை அதிகரிச்சு.
பச்ச மரம் ஒன்னு பொசுக்குனு பட்டதே,
நீ முறைக்கும் போது எனக்குள் தீ பிடிக்குதே.
உன்கிட்ட கோபிக்க என்னோட மனசை என்னடி செஞ்ச?
சொல்லு சொல்லு.
சாதலை நினைக்க சாமந்தீப் பூவே என்னடி பண்ண?
சொல்லு சொல்லு.
பாதகத்தி! உன்னை நினைத்து பாறாங்கல்லா ஆச்சு நெஞ்சு.
மனசுக்குள்ள கோபம்,
உன்னால நானும் பாவம்,
உள் நாக்குள்ள சாபம்,
நிலைமாறிப்போனேன்.
கானக்குயிலாகப் பறந்து திரிஞ்சேன் நானும் தான்.
காற்றாக என்னைச் சூழ்ந்து சிறைப்பிடித்தாய் நீயும் தான்.
சூரியனோடு வெளிச்சமாய் சேர்ந்துவிட்டேன் நான்.
உன் நினைப்பை உயிரோ
அனுபவம்# Experience
தனிமை புதிதல்ல
தனியே தவிப்பதும்
தன்னை தவிர்ப்போரை
தவிர்ப்பதும்
தடைகளை தகர்ப்பதும்
தனிமையில் திளைப்பதும்
புதிதல்ல வெவ்வேறு விதமான அனுபவங்கள் காலங்களும் காட்சிகளும் விதவிதமாய் கற்ப்பிக்கும் ஆச்சர்யங்களுக்கு மட்டும் பஞ்சமே இல்லை வாழ்க்கையில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் அனுபவங்களை அனுபவித்துக் கற்றுக்கொள்கிறேன்
கற்றோராலும் பெற்றோராலும் வாய்மொழியாய் கற்ப்பித்தாலும் கற்க்க முடியாத கற்றலிது கல்லாதோறும்
கனம் கனம் கற்க்கும் கல்வியிது.
-குளித்தலை குமாரராஜா
சந்தனக் கட்டைமேல்
****************************************************
சந்தனக் கட்டைமேல் சவ்வாது கொட்டிவைத்து
வெந்தழல் ஏற்றிடினும் வேகும் பிணம்நாறும் !
எந்தஉலகம் ஆண்டுமென் ? என்னபோகம் அடைந்துமென் ?
நைந்த மனம் நாறும் நமக்கே !
மாய்ந்ததோ ஒழுக்கநெறி
************************************************
கயல்விழியாள் பின்தொடர செயல்வழியில் கேடுறுவார்
அயல்மனையாள் கைகோர்த்து ஊரூராய்ச் சுற்றிடுவார்
தயங்காது சங்கமிப்பார் காலநேர வரம்பின்றி
உயர்வான ஒழுக்கநெறி மாய்ந்ததோ செயலிழந்தே !