முதலீடு

பணம் உள்ளவன் பணத்தை முதலீடு செய்கிறான்,
குணம் உள்ளவன் குணத்தை முதலீடு செய்ய முடியுமா?
ஆம், குணமும், நல்ல மனமும் சிறந்த முதலீடு தான் பிறருக்கு,
பயன்படும் மட்டுமே தவறுகள் மன்னிக்கப்படும்,
ஆசை வார்த்தைகள் ஆயிரம், நம்பினால் வரும் ஏமாற்றம்,
புரிந்து கொள் மனமே.

என் உழைப்பை நம்பி வாழ்கிறேன், யாரையும் ஏமாற்றாத
திருப்தி என்னுடையது, என் வாழ்க்கையை எண்ணி வருந்தியது,
வீணடித்தது பெரும் பகுதியை, ஏச்சுக்களும் பேச்சுக்களும்,
அறட்டல்களும், மிரட்டல்களும் ஓங்கி வந்த ஏமாற்றங்களும்
தொலையும் காலம் தூரமில்லை, சிறு அடியெடுத்து வைக்கிறேன்,
நானே எனது மூலதனம்.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (22-Nov-25, 2:45 pm)
Tanglish : muthaleedu
பார்வை : 27

மேலே