தேர்தல் 2026
ஐந்தாண்டுக்கொருமுறை
கையூட்டுப் பெற்று
கைவிரலில் மையிட்டு
யோக்கியனென
அயோக்கியனை
தேர்ந்தெடுக்கும் நாள் ......
நாட்டிற்கும்
மக்களுக்கும்
நலம்புரிய நன்மைகள் பல புரிய
ஒரு கட்சி போதாதா
விண்ணில் தோன்றும்
விண்மீன்களாய்
எதற்கு இத்தனை கட்சிகள்
மக்களுக்கு பயன்கள் தரவா ?
கட்சிகள் பயன்கள் பெறவா?
அரசியல் கூட்டம் என்றால்
அணி திரளும் மக்கள் அலை
தன்மான தலைவர்களின்
அறிவுரை கேட்க
தானாய் சேர்ந்த கூட்டமா ?
கோட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் -பலர்
கொடிக்கரை சேலை பெற -சிலர்
இருக்கைகளை நிரப்பி
மன நிறைவு பெற
எத்தனை ஏமாற்றங்கள்......
தேர்தல் வாக்குறுதியென
அடுக்கடுக்காய்
அட்டவணை இடுவார்
இலவசங்கள் என
இன்பச் செய்தி உரைப்பார்
வாலிபருக்கும் வயோதிகளுக்கும்
வாக்கரிசி போடுவார் .
ஓட்டு சேகரிக்கும் போது .....
குடிசை வீட்டில் கும்பிடு போடுவார்
ஓட்டு வீட்டில்
ஓட்டையை அடைக்க
உத்தரவிட்டு ஒன்றாக உட்கார்ந்து
உணவு உண்பார்.
மாடி வீட்டில்
மரியாதை நிமித்தமாய்
பொன்னாடையிட்டு புன்னகை புரிவார்
வீதியில் வருபவரை
வரவேற்க வீட்டு வாசலில்
கைவிளக்கு ஏந்திய காரிகையாய் ...பெண்கள்
ஒலிம்பிக்கில்
வெற்றி வாகை சூடியவனை
வரவேற்கும் பொருட்டு
பூங்கொத்துடன் ....
வந்தவனை
வரவேற்க....
மதிப்பளிக்க ..... அவன்
மனதில் இடம் பிடிக்கவும்
விலை உயர்ந்த பொன்னாடை.

