ஒரு வாரமாய்…

ஒரு வாரமாய்…!

காலம் எனக்காக
பொறுமையாய்
காத்திருக்கிறது

கண்ணில் காணும்
உலகம்
அழகாய் தெரிகிறது
ஆழ்ந்து இரசிக்கவும்
முடிகிறது

பரபரப்பில்லா உள்ளம்
பக்குவமாய் மனம்
தொடர்புகள் எதுவும்
இல்லாமல்
தொல்லைகள் எதுவும்
வராமல்..!

ஏனிந்த அமைதி..!
என்னவாயிற்று
எனக்கு?

கதவு தட்டி
கொடுத்து விட்டு சென்றான்
நண்பன்
ஒரு வாரமாய்
பழுதடைந்த
என் கைபேசியை
சரி செய்து விட்டதாக..!

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (16-Jul-25, 10:42 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 86

மேலே