தகவல் தொடர்பு தின சிறப்பு கவிதை

#உலக_தகவல்_தொடர்பு_தினம்

படைப்பு கவிதை ரசிகன்
#குமரேசன்

புறா காலில்
தகவல்
அனுப்பிய காலம் போய்
புறாக்களையே !
கவரில் அனுப்பும்
காலம் வந்துவிட்டது...

"சாவுக்குச் சொன்னால்
சாஸ்திரத்துக்கு
வருவார்கள் ' என்று
சொல்வார்கள்...
இன்று
'சாவுக்குச் சொன்னால்
சாவுக்கே
வந்து விடுகிறார்கள்....!'

ஒரு மனிதனுக்கும்
இன்னொரு மனிதனுக்கும்
இடையேயான
தகவல் பரிர்வு
'தாயுக்கும் குழந்தைக்கும்
இடையே உள்ள
தொப்புள்கொடி பகிர்வு....!'

'இரயில்' வேகத்தில்
சென்ற தகவல்கள் எல்லாம்
'இ-மெயில்' வேகத்திற்கு முன்னால்
இன்று
தோற்று விடுகிறது...

அலெக்சாண்டர் கிரஹாம்பெல்
தொலைவில் இருந்தாலும்
தொல்லை இல்லாமல்
தகவல்களை பரிமாற
தொலைபேசியை
உருவாக்கி ஈந்தார்....
புறாக்களின்
சிறகுகளுக்கு ஓய்வு தந்தார்....

தந்தியை
முந்தி செல்லும்
தகவல் தொழில் நுட்பம்
வந்ததால்
இந்திய எதிர்த்தது போல்
தந்தியை
எடுத்தே விட்டார்கள்.... !

இன்றைய
தகவல் தொடர்பு சாதனங்கள் கிராமத்தையோ
மாவட்டத்தையோ
மாநிலத்தையோ
நாட்டையோ அல்ல
உலகத்தையே !
'ஒரு குடும்பம்' ஆக்கிவிட்டது...

கைபேசி
கைக்கு வந்த பிறகு
தகவல் தொடர்புகளை
கையினால் என்ன ?
கயிறு போட்டுக் கூட
பிடிக்க முடியவில்லை....

கைபேசியில்
"ஒலி"யின் வேகம்
"ஒளி"யின் வேகத்தையே
மிஞ்சி விட்டது....
"எழுத்துக்களின்" வேகம்
விமானத்தையே
மிதிவண்டியாக்கி விட்டது...!

அன்று தகவல்
'ஊர் தாண்டுவதற்கு
ஒரு வாரம்' ஆகும்
இன்றைய தகவல்
'ஒரு நொடியில்
நாட்டையே' தாண்டி விடுகிறது

வானொலி
போனொலி
டிவி வாயொலி
செய்தித்தாள் மொழி
தபால் வழி
இவைகள் இல்லாவிட்டால்
மனித வாழ்க்கையில்
ஏது ஔி....?

♥அனைவருக்கும் உலக தகவல் தொடர்பு தின நல்வாழ்த்துகள்♥

கவிதை ரசிகன்

எழுதியவர் : கவிதை ரசிகன் (17-May-24, 3:13 pm)
பார்வை : 12

மேலே