கவிஞர் கவிதை ரசிகன் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  கவிஞர் கவிதை ரசிகன்
இடம்:  சங்ககிரி
பிறந்த தேதி :  21-Dec-1975
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Mar-2014
பார்த்தவர்கள்:  488
புள்ளி:  240

என்னைப் பற்றி...

கவிதை,நகைசுவை துணுக்க்கள் எழுதுதல்

என் படைப்புகள்
கவிஞர் கவிதை ரசிகன் செய்திகள்
கவிஞர் கவிதை ரசிகன் - கவிஞர் கவிதை ரசிகன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Jan-2019 1:08 am

⚔⚔⚔⚔⚔⚔⚔⚔⚔⚔⚔

*சமுதாயக் கவிதை*


*கவிஞர் கவிதை ரசிகன்*

⚔⚔⚔⚔⚔⚔⚔⚔⚔⚔⚔
உயர் ஜாதிக்காரன்
போகின்ற கோவிலுக்கு
கீழ்சாதிக்காரன்
போவதை தீட்டு என்று
சொல்பவர்கள்....
கீழ் ஜாதிக்காரன் போகின்ற
அரசு மருத்துவமனைக்கு
மேல்சாதிக்காரன்
போகின்றார்களே...!
ஐயோ தீட்டு.....!!!

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
தெய்வத்திற்கு
தங்கத்தில் ஆபரணங்கள்
அணிவித்தால்தான்
மகிழ்வார் என்று சொல்கிறார்கள்....
அப்படியானால்
கோவில் நகைகள்
திருட்டு போன போது
ஏன் தெய்வம் அழுவவில்லை...???

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
அரசாங்கம்
மக்களின்
நியாயமான கோரிக்கையை
அலட்சியம் செய்வது....!
மக்கள்
கடையடைப்பு
வாகன எரிப்பு
பேருந்து சிறைப்பிடிப்

மேலும்

உண்தைான் உறவே... 12-Jan-2019 12:40 am
அரசின் மகத்துவம் தெரியாமல் நாம் தேர்ந்தெடுக்கும் வக்கற்ற பிரதிநிதிகளால் உண்டாவதே இந்த அவலம் 10-Jan-2019 8:37 am
கவிஞர் கவிதை ரசிகன் - கவிஞர் கவிதை ரசிகன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-May-2018 3:59 pm

#படிப்பு_ஒரு_தடையல்ல

படிக்க ஆர்வமிருந்தும்
படிப்பு வரவில்லையே! என்று
புலம்பிக் கொண்டும்...

படிப்பு வந்தும்
படிக்க முடியாமல் போனதே என்று
வறுமையில் வாடிக்கொண்டும்
வாழ்ந்தது போதும்
எழுந்து வா இளைஞனே!

உயர் படிப்பு என்பது
வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு படியல்ல..
நான்கு பேர் பாராட்டும் அளவிற்கு
வாழ்ந்து காட்ட
அது தடையுமல்ல...

மூன்றாம் வகுப்பு படித்த
காமராஜர் தான்
தலைவர்களுக்கு எல்லாம்
தலைவராக வாழ்ந்தார்...

ஏழாம் வகுப்பு படித்த
எடிசன் தான்
கண்டுபிடிப்பில்
முடிசூட மன்னனாக திகழ்ந்தார்....

பத்தம் வகுப்பு தேர்ச்சியடையாத
மாஸ்டர் சர்ச்சின் தான்
கிரிக்கெட்டில்
எண்ணற்ற சாதனைகள்
படைத்துள்ளார்....

அறிவு

மேலும்

நன்றி உறவே 07-Jun-2018 4:40 pm
அருமை நண்பரே 28-May-2018 7:29 pm
சிறந்த தன்னம்பிக்கை வரிகள்.அருமை சகோ. 28-May-2018 6:34 pm
கவிஞர் கவிதை ரசிகன் - கவிஞர் கவிதை ரசிகன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Jun-2018 10:54 am

ஒருவனை
பணக்காரன் என்றனர்
ஒருவனை
ஏழை என்றனர்

அவன்
மாளிகையில் வாழ்ந்தான்
இவன்
மண்குடிசையில் வாழ்ந்தான்...

அவன்
பால் குடித்தான்
இவன்
கூழ் குடித்தான்...

அவன்
பட்டாடை உடுத்தினான்
இவன்
பருத்தியாடை உடுத்தினான்...

அவன்
காரில் போனான்
இவன்
காலில் போனான்...

அவன்
ஒரு நாள் இறந்தான்
இவன்
ஒரு நாள் இறந்தான்

அட....!
இப்போது
இருவரையும்
'பிணம்' என்றே!
அழைக்கின்றனர்.....

-கவிதை ரசிகன்

மேலும்

நன்றி உறவே 07-Jun-2018 4:39 pm
நன்றி உவே 07-Jun-2018 4:38 pm
அருமை நண்பரே 05-Jun-2018 3:07 pm
Nanru 05-Jun-2018 2:00 pm
கவிஞர் கவிதை ரசிகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Mar-2018 10:09 am

ஏண்டா...ஏண்டி...
உங்களுக்கு
ரோசம்
மானம்
வெட்கம்
சூடு சுரணை
எதுவுமே இல்லையா...
வயிற்றுக்கு
உப்பு போட்டுத்தானே
சோறு தி்ன்கின்றீர்கள்...
ஆமாம்...
நன்றி கெட்ட நாயே என்று
திட்டுகின்றீர்களே...
நான்
எப்பொழுது
நன்றி கெட்டிருக்கிறேன்...?
இனிமேல்..
நன்றி கெட்ட மனிதனே!
என்று திட்டுங்கள்...
திரும்பவும்
யாராவது
அப்படி திட்டினீர்கள்...
நான்
நாயாக இருக்கமாட்டேன்
மனிதனாக மாறிவிடுவேன்...

படைப்பு
கவிதை ரசிகன் குமரேசன்

மேலும்

கவிஞர் கவிதை ரசிகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Mar-2018 12:05 pm

ஜாதிக்கும் ஜாதிக்கும்
மதத்திற்கும் மதத்திற்கும்
வசதிக்கும் வசதிக்கும்
படிப்பிற்கும் படிப்பிற்கும்
பணத்திற்கும் பணத்திற்கும்
கௌரவத்திற்கும் கௌரவத்திற்கும்
திருமணம் நடக்கிறது.....
என்று
திருமணம் நடக்குமோ
"ஒரு பெண்ணுக்கும்
ஒரு ஆண்ணுக்கும்...??"

படைப்பு
கவிதை ரசிகன் குமரேசன்

மேலும்

சமுதாயத்தின் மீது சொடுக்கப்பட்ட பகுத்தறிவுச் சாட்டை உங்கள் வரிகள்... அருமை நண்பரே வாழ்த்துகள்... 05-Mar-2018 6:10 pm
கவிஞர் கவிதை ரசிகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Mar-2018 11:10 am

#உழவுத்_தொழில்

பயிர் தொழில்
இல்லையென்றால்
உயிர் தொழில்
உலகில் ஏது?

கணினி கற்றல்
சிறப்பென்பார்கள்...
கலெக்டர் ஆவது
புகழென்பார்கள்...
டாக்டர் ஆவது
லட்சியம் என்பார்கள்...
வக்கீலாவது
வாழ்க்கை என்பார்கள்...
பசி ஒன்று வந்தால்
இவர்கலெல்லாம்
எதை எடுத்து உன்பார்களோ?

ஏழை எளியவர்கள்
வயலில் குனியவில்லை என்றால்
நம் நாடு
உலகில் நிமிர்ந்திடுமா?

உழவர்கள் எல்லாம்
கால்பகுதி ஆடைகளையே
உடுத்துகிறார்களே...
மீதி ஆடையை
நம் தேசத்தின் மானத்தைக்
காக்க கொடுத்து விட்டார்களோ?

பயிரின் நுனியில்
தானியங்கள் விளைவது
எல்லோருக்கும் தெரியும்...
ஆனால்
அதன் வேரில்
நமது
பண்பாடு
கலாச்சாரம்

மேலும்

அருமை ........ 02-Mar-2018 7:31 pm
அருமையான பதிவு.... 02-Mar-2018 5:41 pm
இந்த உலகில் ஒரு கூட்டம் அழிந்து கொண்ட இருக்க வேண்டும் அதற்காக இன்னுமொரு கூட்டம் முகநூல் வாட்சப் எங்கும் பதிவுகள் இட்டு விருப்புக்களை பெருக்கிக் கொள்வதை தான் நோக்காக கொண்டிருக்க மனிதம் எங்கனம் முன்னேறும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Mar-2018 5:36 pm
கவிஞர் கவிதை ரசிகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Feb-2018 11:23 am

எடிசனி்ன் மனம் தளராமைத்தான்
மின் விளக்கை கண்டு பிடித்தது....

காந்தியடிகளின்
மனம் தளராமைத்தான்
சுதந்திரத்தைப் பெற்றுத் தந்தது...

அப்துல்கலாமின்
மனம் தளராமைத்தான்
அக்னி ஏவுகணையை உருவாக்கியது...

அம்பேத்காரின்
மனம் தளராமைத்தான்
அடிமைத்தனத்தை ஒழித்தது...

விழும்போதெல்லாம்
மனம் தளராதே.!
விழுந்தால்தான் எழ முடியுமென்று
மனதை வலிமையாக்கு...

தோற்கும் போதெல்லாம்
சோர்ந்து விடாதே!
தோற்கின்ற அளவுக்கு
உன் வெற்றி
உறுதி செய்யப்படுகிறதெனறு
தொடர்ந்து முன்னேறிச் செல்....

உதிர்ந்து விட்டது என்பதற்காக
செடி பூக்காமல் இருப்பதில்லை...
விழுந்து விட்டதற்காக
அலைகள் எழாமல் இருப்பதில்லை..

மேலும்

கவிஞர் கவிதை ரசிகன் - கவிஞர் கவிதை ரசிகன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Jan-2018 12:03 pm

"உன்னிடம்
கவிதை புத்தகம் இருக்கிறதா?" என்று
நண்பன் கேட்டான்...
ஓ....!
இருக்கிறதே! என்று
சொல்லி
அழைத்து வந்து காட்டினேன்
பெண்ணே!
"உன்னை...."

மேலும்

நன்றி உறவே 11-Jan-2018 11:14 am
என்றும் உண்டு . நற்கவிஞர்களுக்கு நான் என்றும் ரசிகன் . 09-Jan-2018 2:43 pm
உங்கள் அன்பும் ஆதரவும் ஊக்கமும் என்றும்வேண்டும் உறவே.... 09-Jan-2018 1:02 pm
அருமை கவிதைக்கேற்ற படம். மாருதியின் சித்திரங்களில் அழகு சொட்டும் பெண்கள் சித்திரங்களில் கேட்கவே வேண்டாம். 04-Jan-2018 10:11 pm

பெண்ணே!
எதை விட்டு
நான்
எங்குச் சென்றாலும்...
'உன் நினைவுகளை' விட்டு
என்னால
'கல்லறை' க்குக் கூட
செல்ல முடியாது....!

மேலும்

கவிஞர் கவிதை ரசிகன் - Aruvi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Nov-2017 12:08 pm

பின்னிக் கொண்டது
இதயம்
அவள் பின்னலில்

மேலும்

இனி சிக்கெடுப்பது சிரமம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-Nov-2017 7:22 pm

தாயில்லாமல்
யாரும்
பிறந்திருக்க முடியாது....
நண்பர்கள் இல்லாமல்
யாரும்
வாழ்ந்திருக்க முடியாது..!

மேலும்

நல்ல நண்பின் அருகே வாழும் வாழ்க்கையும் வசந்தமாகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Nov-2017 12:13 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (4)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்

இவரை பின்தொடர்பவர்கள் (3)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
மேலே