Aruvi - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : Aruvi |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 09-Mar-2017 |
பார்த்தவர்கள் | : 5012 |
புள்ளி | : 505 |
சித்திரை மகளே/
முத்தமிழ் நிலவே/
சில்லெனத் தென்றல்/
மெல்லெனத் தழுவ/
மல்லியின் வாசம்/
முல்லையோடு இணைய/
வெண்ணிறப் பட்டு/
பொன்னிடைத் தொட்டு/
கொஞ்சும் சலங்கொலி/
மிஞ்சிடும் சிரிப்பொலி/
முக்கனிகளைஏந்தி/
சக்கரைப் பொங்கலென/
மகிழ்ச்சிப் பொங்கிடவே/
மங்கலம் பெருகிடவே/
விகாரியே விரைந்தோடி வருக/
நாட்டினில் நல்லறமே பொலிக.
நல்லா பாரு நல்லா பாரு /
நாட்டில் நடக்கும் தேர்தல் பாரு/
குல்லா போடும் கூட்டம் பாரு/
கல்லா கட்டும் ஆட்டம் பாரு/
வோட்டு கேட்டு வர்றான் பாரு/
நோட்டைக் கொட்டும் காட்சிப் பாரு/
அனல் பறக்கும் பேச்சைக் கேளு/
தினம் கொட்டும் பொய்யைக் கேளு/
இலவசம் இலவசம் போடறாங்க வேசம்/
இனியும் வாங்கினா வாழ்க்கையே நாசம்/
கொதிக்குது கொதிக்குது பெண்மையிங்கே கதறுது/
பதைக்குது பதைக்குது பாவிகளை விரட்டிடு/
நல்லவரைத் தேர்ந்தெடு நரிகளை விரட்டிடு/
நாட்டைக் காப்பாற்ற வாக்குச் சாவடிக்கு விரைந்திடு.
காதல் வேடிக்கை
***********************
சித்தமே கலங்கிடவே கன்னியுனை நினைத்திடவே/
நித்தமே உன்றனையே கனவினில் கண்டிடவே/
பித்தமே ஏறிடவே பெண்மயிலே தவிக்கையிலே/
முத்தமே கொடுத்திடவே என்னிதழும் துடிக்கையிலே/
வேடிக்கையே காதல் இங்குப் பூமியிலே/
வாடிக்கையே காதலியே சாதிமதம் பிரித்திடுமே/
சோதனையே சூழ்ந்திடவே சோர்ந்திடாது வாமயிலே/
மாநிலமே அன்பினிலே பிணைந்திங்கு வாழ்ந்திடுதே/
ஊரதுவும் தடுத்திடினும் தடைபடுமா காற்றிங்கே/
நீரதுவும் அள்ளிடவே குறைந்திடுமா கடலளவே/
பூங்கொடியே படர்ந்திடவே மரமதுவும் தழுவிடவே/
ஆசைதனை விட்டவரும்
காதலிப்பார் காதலையே.
தித்திக்கும் தைமகளே தீஞ்சுவையோடு வருக/
எத்திக்கும் முத்தமிழை முழங்கியே வருக/
உத்தமியே பத்தினியே சீரோடு வருக/
இத்தரையே மகிழ்ந்திடவே இளையவளே வருக/
கைவளையல் குலுங்கிடவே தமிழ்மகளே வருக/
பைந்தமிழில் பண்ணிசைத்துப் பாங்குடனே வருக/
வையகமே குளிர்ந்திடவே தென்றலாய் வருக/
தைதையென குதித்தோடி குமரியே வருக/
நீர்வளமே நிறைந்திடவே காரோடு வருக /
பார்முழுதும் பசுமையே பூத்திடவே உழுக/
தேரோடும் வீதியிலே அசைந்தாடி வருக/
பேரோடு புகழோடு தமிழினமே மிளிர்க/
இன்பமே பொங்கிடவே இளையவளே வருக/
துன்பமே அகன்றிடவே நல்லாட்சி மலர்க/
அன்பிலே கனிந்தே கன்னியே வருக/
கன்னலென இனித்திடும் கவிதையைத் தருக/
பனியது விலக
சித்திரையே வருக
நித்திரையை களைக
வளமையே செழிக்க
வறுமையை ஒழிக்க
காவிரியே பாய்க
உழவர் மகிழ்க
ஆட்சியரே திருந்துக
அவலங்கள் மறைக
பசுமைக்கொடி பறக்க
பசித்துயரம் ஒழிக
இளைஞர் விழிக்க
பகைவர் அழிக
இன்முகம் விரிக
புத்தாண்டே பிறக்க
புதுவளங்கள் பெருக
அன்போடு அழைக்க
விளம்பியே நுழைக
நாம் ஏன் எழுதுகிறோம் ?
தமிழுக்கு அமுதென்று பேர் ----ஏன்
பொய்க்கு கவிதை என்று பேர் ----ஏன்
புரை தீர்ந்த பொய்யும் வாய்மை இடத்து ----ஏன்
காதல் வாழ்வா சாவா அல்லது வெறும் கவிதையா ?
நாம் செய்யக் கூடாத செயல் எது?
இந்த உலகில் நீங்கள் யாரை அழகு என நினைக்கிறீர்கள்?
காதல் வந்த பிறகு
பார்க்காமல் இரு !
பேசாமல் இரு !
எனும் கட்டளையை கூட
இதயம் ஏற்றுக்கொண்டு விடுகிறது
"நினைக்காமல் இரு " எனும்
கட்டளையை நிச்சயமாய்
ஏற்றுக்கொள்ள மறுத்து விடுகிறது !
தமிழ் சொற்களும் என் மீது காதல் வயப்பட்டது போலும்,
இரவில் என்னை தூங்க விடுவதில்லை,
பகலில் எந்த வேலை செய்யவும் விடுவதில்லை,
எந்நேரமும் கண்முன் ரீங்காரமிட்டு கொடுக்கிறது தொல்லை,
இது எங்கே போய் முடியுமோ தெறியவில்லை
இருப்பினும் அதனை தவிர்க்கும் துணிவு ஒருபோதும் இருந்ததில்லை,
நானும் அவற்றின் மீது காதல் கொண்டேன் போலும்
-என்றும் அன்புடன் ஷாகி
உன் அருகில் இருக்கத்தான் ஆசை!
யாரும் இல்லாத பொழுது...
உன் கையால் பூச்சூட ஆசை!
தெரிந்தவர் வராத பொழுது...
நீ கொடுத்த சேலையை உடுத்த ஆசை!
அம்மா அறியாத பொழுது ...
உன் கையோடு கைசேர்த்து நடக்க ஆசை!
பக்கத்தில் யாரும் இல்லாத பொழுது...
ஊரறிய இவையெல்லாம் நடக்க ஆசை!
உன்னவளாய் நான் மணம் சூடும் பொழுது...
நண்பர்கள் (11)

செல்வமுத்து மன்னார்ராஜ்
கோலார் தங்கவயல்

அருணன் கண்ணன்
கிருஷ்ணகிரி

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை

கவிஞர் செநா
புதுக்கோட்டை, தமிழ்நாடு

அர்ஷத்
திருநெல்வேலி
இவர் பின்தொடர்பவர்கள் (11)
இவரை பின்தொடர்பவர்கள் (14)

கவிஞர் பெருவை பார்த்தசாரதி
கலைஞர் நகர், சென்னை-78
