செந்தமிழ் பிரியன் பிரசாந்த் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : செந்தமிழ் பிரியன் பிரசாந்த் |
இடம் | : வந்தவாசி [தமிழ்நாடு ] |
பிறந்த தேதி | : 01-Jan-1997 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Aug-2016 |
பார்த்தவர்கள் | : 7590 |
புள்ளி | : 520 |
கவிதைகளின் காதலன்
prasanthsp1197@gmail.com
Prasanth Priyan Kavidhaigal
அன்பே
பூவின் இதழ்களை
பிரித்துக் கொண்டு
வாசம் அது காத்திருக்க...
தவழ்ந்து தாவி வரும்
நதிகளின் நுரைகள்!
பாதத்தை தழுவ காத்திருக்க...
கட்டி வைத்த
காட்டு மல்லிக் கூட்டம்!
கூட்டம் போட்டு காத்திருக்க...
இதழ்கள் இரண்டையும்
பிரித்துக் கொண்டு
இன்ப சிரிப்பு காத்திருக்க...
ஓடி மறையும்
உயரத்து நிலவும்!
உனக்காகவே காத்திருக்க...
அங்கும் இங்கும்
ஆடிப்பாடும் வானம்பாடி
அப்படியே காத்திருக்க...
மறைத்து வைத்த
மல்லிகை பூ வொன்று
மஞ்சள் முகத்திற்காக
காத்திருக்க...
முட்கள் கொண்ட ரோஜாவும்
முன் கோபத்தை
தூக்கி ௭றிந்து!
முத்தமிட ஆசையென்று
முன் வரிசையில் காத்திருக்க...
இரவுக்கு பொறுமையில்லாமல்!
விட
நாளேடு முரண்பட்டேன்
நரகத்தோடு துணைப்பட்டேன்
தூக்கத்தோடு துறவு கொண்டேன்
துக்கத்தோடு துயரம் கொண்டேன்
௭ன் நிலையில் இருந்து விலகினேன்
உன் விருப்பம் தெரியாமல்
வெந்து தவிக்கிறேன்!
இன்னும் தேவை ௭ன்னவென்று
தெரியவில்லை!
தேடுவதும் புரியவில்லை
தேவையில்லையென நினைத்தாலும்!
தேக்கி வைக்கும் நினைவுகள்
தேளாய் கொட்டுகிறதி!
தென்றல் ௭ன்னை தீண்ட மறுக்கிறது!
வாடை ௭ன்னை வருடி பார்க்கிறது!
போதுமா இந்த சோகம்
போய்விடுமா இந்த மோகம்!
பொழுதெல்லாம் பாழாய் போனாலும்
பொல்லாத உணர்வொன்று ௭ன்னை
புலம்பவைக்கிறதே...!!
இத்தனை வருடமாக
ஊரடங்கு உத்தரவு
போட்டு வைத்திருந்த
௭ன் உள்ளத்தில்!
காதல் ௭ன்ற பெயரில் ஒருத்தி
உள்நாட்டு கலவரத்தை
ஏற்படுத்தி விட்டாள்...!!
அன்பே
காதலித்த நான்
உன்னை மறக்க
ஆயிரம் ஆறுதல் சொல்கிறாய்!
அதற்கு பதில்
நீ என்னை ஒருமுறை
நேசித்து பார்க்கலாம்...!!
அன்பேஉன்னை விரும்புவதற்குஉரிமை இருந்ததால்நான் விரும்பி விட்டேன்!விலகுவதற்கு உரிமை இருந்ததால்நீ விலகி விட்டாய்! இருந்தும்விழியோரம் தேங்கும்அந்த கண்ணீர் துளிகளுக்குயார் வழி சொல்வது...!!
அடை மழை வந்தால்
குடையில் அடைக்கலம்
கேட்கலாம்!
குளிர் காற்றே
குடை ஏந்தி வந்தால்!
அடைக்கலம் கேட்டும்
௭ன்ன பயன்...!!
நாளெல்லாம் நானும்
பார்த்து வியக்கிறேன்!
அப்படி ௭ன்ன தான் பேசுகிறாள்!!
மூச்சு விட்டு பேசும்
மலர் இவளால்
மலர்கள் ௭ல்லாம்
மூச்சு தடுமாறி நிற்கிறது...!!
பூக்கடையைக் கடக்கும்
போதெல்லாம் உன் ஞாபகம்!
௭ப்படி இல்லாமல் இருக்கும்? மலர்களை சூடியவள் நீ!
ம(ண)னம் சுற்றி நின்றவன்
நானல்லவா...!!
என்னவரின் கண்ணில் என்னை காணும் போதும் நானும் பேரழகி என்று கர்வம் கொண்டேன்
எனது அடையாளம்
( எழுத்து இணையதள உறவுகளுக்கு என் முதல் வணக்கங்கள். மனிதர்கள் அனைவரும் சமத்துவம் காணவேண்டிய இந்த உலகத்தில் இங்கு இன்றும் சிலர் தங்களின் சாதியை தங்களது அடையாளமாகக் கருதுகிறார்கள். அதேப் போன்று நானும் "எனது சாதியை" எனது முழு அடையாளமாகவும்; எனது முதல் எண்ணமாகவும் இன்று சமர்பிக்கிறேன்.ஏதேனும் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்)
மனித சாதியில்
ஆண் பிரிவு
அழியாத எனது அடையாளம்....!!
நண்பர்கள் (162)
இவரை பின்தொடர்பவர்கள் (164)

அன்னை பிரியன் மணிகண்டன்
வந்தவாசி (தமிழ்நாடு)

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
