பொல்லாத உணர்வொன்று
நாளேடு முரண்பட்டேன்
நரகத்தோடு துணைப்பட்டேன்
தூக்கத்தோடு துறவு கொண்டேன்
துக்கத்தோடு துயரம் கொண்டேன்
௭ன் நிலையில் இருந்து விலகினேன்
உன் விருப்பம் தெரியாமல்
வெந்து தவிக்கிறேன்!
இன்னும் தேவை ௭ன்னவென்று
தெரியவில்லை!
தேடுவதும் புரியவில்லை
தேவையில்லையென நினைத்தாலும்!
தேக்கி வைக்கும் நினைவுகள்
தேளாய் கொட்டுகிறதி!
தென்றல் ௭ன்னை தீண்ட மறுக்கிறது!
வாடை ௭ன்னை வருடி பார்க்கிறது!
போதுமா இந்த சோகம்
போய்விடுமா இந்த மோகம்!
பொழுதெல்லாம் பாழாய் போனாலும்
பொல்லாத உணர்வொன்று ௭ன்னை
புலம்பவைக்கிறதே...!!