காதல் சிலையழகே சற்றுநின்று செல்
மலரெலாம் மெல்ல மலருமிளம் காலை
மலையாள மான்விழி மங்கையெழில் வந்து
சிலைபோல்நீ நின்றால் சிலவண்ணக் கோட்டால்
அலைபாயும் காதல் அழகு விழியை
கலைந்தாடும் கார்மேக கூந்தலெழில் தன்னை
கலைவர்மன் தீட்டுவான் தூரிகையால் காதல்
சிலையழகே சற்றுநின்று செல்

