எதையோ தேடி

ஓட்டமும் நடையும் தான் நாள் முழுக்க,
உண்ண கூட நேரமின்றி கால் கடுக்க,
பட்டம் பெற்றாலும் பாட்டம் குறையவில்லை,
எண்ணங்கள் தோன்றும் முன்னே, பணிகள்
ஓட வைக்கும் பின்னே, ஒத்த ரூபாய் காசு பேருந்து
பயணத்தில் தேடும் போது கிடைப்பதில்லை போல
நமக்கான நேரம் நமக்கே கிடைப்பதில்லை.

கிடைத்தாலும் ஏதேதோ எண்ணிக் கொண்டு,
கிடைத்த நேரத்தையும் தொலைத்துவிட்டு, எதையோ தேடிக்
கிடைத்தார் போல வெறுமை பெற்றோம், வேறென்ன
பெருமை கொள்ள, மழையில் எருமை போல் நாளும்
பொறுமை கொண்டு ஏமாளி என்கிற பட்டம் பெற்றோம்,
வேறென்ன கற்றோம், மகிழ்ச்சி நடனம், கையில் இருந்தது,
எல்லாம் தொலைந்த பின்னும் நம்பிக்கை மட்டும் விடுகிறது
எதையோ தேடி.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (21-Nov-25, 1:13 pm)
Tanglish : ethaiyo thedi
பார்வை : 10

மேலே