இன்னிசை இருநூறு 34 - நான்காவது அதிகாரம் – கூடாவொழுக்கம் 4

இன்னிசை இருநூறு 34 - நான்காவது அதிகாரம் – கூடாவொழுக்கம் 4
இன்னிசை வெண்பா

பிறனில் விழைந்த பொழுதே பிறங்கும்
அறிவு மழுங்குமால் ஆளுமால் அச்சங்
குறையுமால் ஆண்மை குடிபுகுமால் வஞ்சம்
புறம்புறுமாம் நட்புப் புகழ். 34

- இன்னிசை இருநூறு

பொருளுரை:

பிறன் மனைவியை விரும்பிய பொழுதே ஒருவனுடைய மாறுபட்ட அறிவு மழுங்கும்; அச்சம் குடிகொள்ளும்; தன் மரியாதைக்குரிய ஆண்மையும் குறைவுபடும்.வஞ்சம் புகுந்து நட்பும் புகழும் தன்னைவிட்டு நீங்கும்..

எழுதியவர் : அரசஞ்சண்முகனார் (16-Dec-25, 6:53 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 8

மேலே