நிகரில் அறிவினார் வேண்டார் - ஆசாரக் கோவை 55

பஃறொடை வெண்பா

கறுத்த பகைமுனையுங் கள்ளாட்டுக் கண்ணும்
நிறுத்த மனமில்லார் சேரி யகத்தும்
குணநோக்கிக் கொண்டவர் கோள்விட் டுழியும்
நிகரில் அறிவினார் வேண்டார் பலர்தொகு
நீர்க்கரையும் நீடு நிலை. 55

- ஆசாரக் கோவை

பொருளுரை:

ஒப்பற்ற அறிவுடையவர், கடுமையான பகையுடையோர் பொருதும் போர்முனையிலும், கள் குடித்து ஆடும் இடத்திலும், நிலை நிறுத்திய மனமில்லாத வேசையர் வாழ்கின்ற தெருவிலும், குணங்களை ஆராய்ந்து நட்புக் கொண்டவர் கொள்கையை விட்ட இடத்திலும், பலர் ஒன்று கூடும் தண்ணீர்த் துறையிலும் நீண்ட நேரம் நிற்பதை விரும்ப மாட்டார்கள்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Dec-25, 8:51 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

மேலே