வேல் முனியசாமி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : வேல் முனியசாமி |
இடம் | : தூத்துக்குடி |
பிறந்த தேதி | : 10-Mar-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Jun-2019 |
பார்த்தவர்கள் | : 1500 |
புள்ளி | : 92 |
"தமிழெனும் பெருங்கடலில் மூழ்கி முத்தெடுக்க விழையும் சிற்றெறும்புகளில் நானும் ஒருவன்"
வலிகள் மட்டும் தான் வாழ்க்கை,
என்றிருந்த எனக்கு,
இப்போது வழிகளே இல்லை என்றாகிவிட்டது..... ஆற்றிட....! தேற்றிட.....!
அன்னையும் இல்லை,
அவளாய் இருப்பேன் என்றவளும் இல்லை,
இப்போது என் மனநிலை மட்டுமே......
அனாதையாக நிற்கிறது....!
வேல் முனியசாமி....
நீண்ட நெடுந்தூரம்...
மரங்கள் நிறைந்த சாலையோரம்...
இடையிடையே மழைச்சாரல்...
எங்கோ ஒரு மூலையில்...
ஒற்றைத் தேநீர்க்கடை...
ஆவி பறக்க ஆனந்த அருந்துதல்...
மீண்டும் பயணம்...
வழியெங்கும் சின்னதும் பெரியதுமாய்...
முகடுகளும் மலைகளும்...
துள்ளி விளையாடும் அருவிகள்...
கதை பேசிக்கொண்டு நடைபோடும் நீரோடைகள்...
இப்படி ரசனைமிக்க...
பயணங்கள் ஒருபோதும் முடிவதில்லை...
வேல் முனியசாமி.
நாட்கள் செல்லச் செல்ல,
காய்ந்து உதிர்ந்துவிடும்,
இலைகளோ! பூக்களோ!அல்ல,
அவளின் அன்பும் காதலும்..!
தாய் தந்த,
பாசமும் மொழியும் போல,
என்றும் உதிராமல் என்னோடு வாழும்..!
வேல் முனியசாமி.
வண்ணவண்ணமாய்..!
அங்கொன்றும் இங்கொன்றும்
பசியைத் தீர்த்துக்கொள்கிறார்கள்..!
ஒரே வண்ண பசும் புல்லை உண்டு - ஆடுகள்..!
- வேல் முனியசாமி
கொன்று பிழைப்பதில்
அப்படியொரு ஆனந்தம்
இந்த கூலிப்படைக்காரனுக்கு.....
தினந்தோறும்
வயது வித்தியாசம் பார்க்காமல்
தாறுமாறாய் வெட்டுகிறான்.....
..... கசாப்புக் கடைக்காரன்.....
-வேல் முனியசாமி
மனதில் ஒருவரால் குழப்பம் ஏற்பட்டு கொண்டே இருக்கின்றது என்றால் அதற்கு காரணம் என்ன? ( அனால் அவர் எனக்கு ஒரு நல்ல நண்பர்)
கொக்கரித்துக் கொள்கிறானோ!
மறுபிறப்பில் மாறுகொள்ளும் மானிடனாய்....
சிந்தனையில் மாறுகொண்டானோ! ஏளன எல்லையில் தோல்வியுற்றவனாய்....
மனைவியின் மடியைவிட்டு மகவு ஒன்று கதறிக்கொண்டதோ! அறைகள் முழுதும் பாசக் குரல் கேட்டவனாய்....
கண்களில் நீர் தழும்ப ஆனந்தக் களிப்பில் அள்ளிக்கொண்டானோ!
அன்னையின் அன்பு மீண்டும் கிடைத்துவிட்டதென்று....
பெருமகிழ்ச்சியில் திளைத்துவிட்டானோ!
பித்தனாய் பிதற்றுகின்றான் பிள்ளை வந்து பிறக்கையிலே....!!
வேல் முனியசாமி...
திருமணமான ஆணுக்கு எப்படி தன் மனைவியை தவிர்த்து இன்னோர் பெண் மீது காதல் வருகிறது? அவளை எப்படி இரண்டாந்தாரமாக திருமணம் செய்து கொள்கிறான். இதை சமூகம் சாதாரண விசயமாக பார்க்கிறதா?
இதையே ஒரு பெண் செய்தால் அதனை இச்சமூகம் எப்படி பார்க்கும்?
வலசை போகும் பறவைகள் போல ஆகிவிட்டேன் எங்கெங்கெல்லாம் உன் எண்ணம் எழுகிறதோ! அங்கெல்லாம் செல்கிறது என் மனது......