பயணங்கள் முடிவதில்லை

நீண்ட நெடுந்தூரம்...
மரங்கள் நிறைந்த சாலையோரம்...
இடையிடையே மழைச்சாரல்...
எங்கோ ஒரு மூலையில்...
ஒற்றைத் தேநீர்க்கடை...
ஆவி பறக்க ஆனந்த அருந்துதல்...
மீண்டும் பயணம்...
வழியெங்கும் சின்னதும் பெரியதுமாய்...
முகடுகளும் மலைகளும்...
துள்ளி விளையாடும் அருவிகள்...
கதை பேசிக்கொண்டு நடைபோடும் நீரோடைகள்...
இப்படி ரசனைமிக்க...
பயணங்கள் ஒருபோதும் முடிவதில்லை...

வேல் முனியசாமி.

எழுதியவர் : வேல் முனியசாமி (5-Dec-23, 4:58 pm)
சேர்த்தது : வேல் முனியசாமி
பார்வை : 145

மேலே